முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
81

New Page 1

மேல் ஐக்கியம் சொல்லப்போகாது; 1ஆதலால், உடலும், உடலை விரும்பி நிற்கின்ற உயிரும், உயிருக்குள் தங்கி இருக்கின்ற இறைவனும் ஆன இக்கூட்டம் இத்தனைக்கும் வாசகமாக நிற்கிறது இச்சொல். ‘அவர்’ என்றது ‘இவையாகி நிற்கிறார் அவர்’ என்றபடி. 2‘இவை எல்லாம் பிரஹ்மம் அல்லவா? 3இது நீயாய் இருக்கிறாய்’ என்பன உபநிடத வாக்கியங்கள்.

    4
முதற்பாட்டிலே, நற்குணங்களையுடையவனாக இருத்தல், அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டினையுடையவனாக இருத்தல், வேறுபட்ட திருமேனியினையுடையவனாக இருத்தல் ஆகிய இவற்றை அருளிச் செய்து, இரண்டாம் பாட்டில், ‘எல்லாப் பொருள்களைக்காட்டிலும் வேறுபட்டவன் இறைவன்’ என்பதனை அருளிச்செய்தார். இங்கு ‘அவர்’ என்பதிலுள்ள அகரம் முற்கூறியவற்றைச் சுட்டுகின்ற சுட்டு ஆகையாலே ‘அவர்’ என்று கல்யாணகுணத்தோடு கூடிய தன்மையினைச் சொல்லி, ‘ஆய் நின்ற’ என்று உடல் உயிர் இவற்றோடு கூடியிருக்கின்ற இறைவனைச் சொல்லி, சாமாநாதி கரண்யத்தால் ஐக்கியம் அருளிச்செய்தார் இப்பாட்டால். ஆக, ஆண்பால் பெண்பால் ஒன்றன்பால் என்னும் பேதத்தாலும், மதிக்கத் தக்கபொருள் அழியும் பொருள் என்னும் பேதத்தாலும், நலம்தீங்கவை என்னும் பேதத்தாலும், மூன்று கால பேதத்தால் வந்த விசேடங்களாலும், அறிவுடைப்பொருள் அறிவில் பொருள் ஆகிய எல்லாப் பொருள்களையும் தொகுத்து, அவற்றினுடைய தன்மை இறைவனுக்கு அதீனம் என்றாராயிற்று.

(4)

5

        அவர்அவர் தமதம தறிவறி வகைவகை
        அவர்அவர் இறையவர் எனஅடி அடைவர்கள்
        அவர்அவர் இறையவர் குறைவிலர் இறையவர்
        அவர்அவர் விதிவழி அடையநின் றனரே.

 

1. ‘‘ஆயின், ஆய்நின்ற’ என்னுஞ்சோல், பொருள்களைக் காட்டுவதோடு
  அமையாமல், இறைவன் அளவுஞ்சொல்லும்படி என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘ஆதலால்’ என்று தொடங்கி.

2. சாந்தோக்யம். 3. 4.

3. சாந்தோக்யம். 6. 12.

4. ‘ஆயின், இங்கு ‘அவர்’ என்றசொல்லால் சுட்டப்படும் பொருள் யாது?’
  எனின், ‘முதற்பாட்டிலே’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார்.