முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
90

எல

எல்லாம் தான் என்னலாம்படி இருப்பினும், ‘மண்ணே குடம்’ என்பது போன்று இராமல். 1‘உயிர்களுக்குள் வியாபித்து அவ்வுயிர்களைக் கட்டளை இடுமவனாய், எல்லா வுயிர்கட்கும் ஆத்துமாவாய்,’ இவற்றை நியமிக்குமிடத்தில் இந்தச் சரீரத்துக்கு இவ்வாத்துமா தாரகனாய் நியாமகனாய், சேஷியாய் இருக்குமாறு போன்று 2‘எவனுக்கு இவ்வுலகம் சரீரமாக இருக்கின்றது?’ 3‘எவனுக்கு இவ்வாத்துமாக்கள் சரீரமாய் இருக்கின்றன?’ என்கிறபடியே, தான் இரண்டற்கும் தாரகனாய், நியாமகனாய், சேஷியாய் நின்று நடத்திக் கொண்டு போகின்றான் என்று மேல் சொன்ன சாமாநாதிகரண்யத்துக்குக் காரணம் சரீர ஆத்தும பாவம் என்கிறார். ஆயின், ‘மரத்திலே தேவதத்தன் நின்றான்,’ என்றால், அங்குச் சரீர ஆத்துமபாவம் இல்லை. ‘சாதி குணங்கள் ஒரு வடிவிலே கிடந்தன,’ என்றால், அங்குச்சரீர ஆத்துமபாவம் இல்லை. 4தாரகமாகவும் நியாமகமாகவும் சேஷியாகவும் இருக்கின்ற ஒரு பொருளிலே ஆத்துமபாவத்தையும், 5தார்யம் நியாம்யம் சேஷம் இவற்றோடு கூடியிருக்கின்ற ஒரு பொருளிலே சரீர பாவத்தையும் கோடல் வேண்டும்.

    திடம் விசும்பு எரி வளி நீர் நிலம் - திடம் என்பதனைப் பிரித்து ‘எரி’ முதலிய ஏனைய நான்கு பூதங்கட்கும் கூட்டுக. இனி, 6‘பரம்பொருளிடத்திலிருந்து ஆகாயம் உண்டாயிற்று,’ என்கிறபடியே, ஏனைய நான்கு பூதங்கட்கும் முன்னே தோன்றி, அவை அழிந்தாலும் சில நாள் நின்று பின் அழியக்கூடியது ஆகையாலே விசும்பிற்குத்

 

1. தைத்திரீயம்

2. பிரஹதாரண்யம்

3. பிரஹதாரண்யம்

4. தாரகன் - தரித்துக்கொண்டிருப்பவன். நியாமகன் - ஏவுகின்றவன். சேஷி -
  தன் விருப்பின்படி விநியோகங்கொள்ளுகின்றவன்.

5. தார்யமாவது, உயிர்ப்பொருள் உயிரல்பொருள் ஆகிய அனைத்தையும்
  இறைவன் தன் சொரூபத்தாலும் சங்கற்பத்தாலும் தரிக்கின்றான்; அவனுடைய
  திவ்வியாத்தும சொரூபத்தையும் நித்தியசங்கற்பத்தையும் நீங்கின போது,
  தம்முடைய சத்துக்குக் கேடு பிறக்கும்படி இருக்கும் பொருள். நியாம்யமாவது,
  சரீரத்தினுடைய எல்லா வியாபாரங்களும் ஆத்துமாவினுடைய அறிவிற்கு
  வசப்பட்டுத் தோன்றுமாறு போன்று, ஆத்துமாவினுடைய எல்லா
  வியாபாரங்களும் இறைவனுடைய அறிவிற்கு வசப்பட்டுத் தோன்றுதல்.
  சேஷமாவது, சந்தனம் மலர் தாம்பூலம் முதலியவைகளைப் போன்று,
  இறைவனுக்கு விருப்பின்படி விநியோகங்கொள்ளுதற்குத் தகுதியாய் இருத்தல்.

6. தைத்திரீ. ஆனந். 1.