முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
102

அவனுக

அவனுக்கும் சொன்ன ஐக்கியத்துக்குக் காரணம் சரீர ஆத்தும பாவம் என்றார்; எட்டாம்பாட்டில், குத்ருஷ்டிகளை மறுத்தார்; ஒன்பதாம்பாட்டில், சூனியவாதியை மறுத்தார்; பத்தாம்பாட்டில், வியாப்திசௌகரியத்தை அருளிச்செய்தார். இந்த வகைகளாலே அவனுடைய பரத்துவத்தை உறுதிப்படுத்தினவராய் நின்றார் இதுகாறும்; இத்திருவாய்மொழியில் சம்பந்தமுடையவர்கட்குத் தாம் பெற்ற பேறே பேறு என்னுமிடத்தை அருளிச்செய்கிறார் முடிவில்.

    கரம் விசும்பு - திடமான விசும்பு; அன்றி, அச்சமான விசும்பு எனினுமாம்; ‘அச்சமானபடி யாங்ஙனம்?’ எனின், ‘இங்குக் கழுகு பறக்கிறது,’ என்று நிரூபிக்கவேண்டும்படியாய் இருக்கும் அன்றோ? எரி - நெருப்பு, வளி - காற்று, நீர் - தண்ணீர், நிலம் - பூமி, இவை மிசை - இவற்றின்மேலே உண்டான, வரன் - சிறந்த, நவில் - ஒலி, திறல் - தீயினுடைய தெறுதல், வலி - காற்றினுடைய மிடுக்கு, அளி - தண்ணீரினுடைய தண்ணளி, பொறை - பூமியினுடைய பொறுத்தல். ஆக, இப்படி, இவற்றைத் தன்மைகளாகவுடைய ஐம்பெரும்பூதங்களையும் அருளிச்செய்த அதனால், லீலா விபூதியைச் சொல்லினார் ஆவர். இராசத தாமதங்களைக் கழித்து, 1நிஷ்கிருஷ்ட சத்துவமேயாய் இருப்பது நித்தியவிபூதியாகையால், இங்கே அதனையும் 2உபலக்ஷணத்தாற் கொள்க. ஆய் நின்ற பரன் அடி மேல் - ஆக, இவ்விரண்டு விபூதியோடு கூடியிருக்கின்ற இறைவனுடைய திருவடிகளின்மேல். குருகூர்ச் சடகோபன் சொல்- 3‘வால் மீகிர்ப் பகவான் ருஷி:’ என்பது போன்று ஆப்திக்கு உடலாக அருளிச்செய்கிறார். நிரல் நிறை - சொற்களும் நிறைந்து அர்த்தங்களும் நிறைந்திருத்தல். இனி, ‘நிரன் நிறை’ என்று கொண்டு நேரே நிறுத்தப்படுகை. அதாவது- 4‘நான்கு அடிகளோடு கூடியதாயும், ஒவ்வோர் அடியும் எழுத்துகளால் ஒத்ததாயும், வீணையின் நரம்பு தாளங்கள் அவற்றிற்கு ஒத்ததாயும் இருக்கின்ற ஸ்ரீராமாயணம்,’ என்பது போன்று, இங்கும் செய்யுள் இலக்கணத்திற்குறையாமல் எழுத்து அசை சீர் தளை அடிகளும் பொருளும் அந்தாதியும் முறையாக நிறுத்தப்படுதல் என்னுதல். ஆயிரம்- 5‘இப்படிப்பட்ட சுலோகங்கள்

 

1. நிஷ்கிருஷ்டம் - பரிசுத்தம்.
2. உபலக்ஷணம் - ‘ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல்’ என்னும் உத்தி. 
3. ஸ்ரீராமா. பா. 4 : 1.
4. ஸ்ரீராமா. பா. 2 : 18.
5. ஸ்ரீராமா. பா. 41.