முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
85

மிகுதியினாலே ‘அடி அடைவர்கள்’ என்கிறார். 1‘மாமலர் நீர் சுடர் தூபங்கொண்டு தொழுது எழுதும்’ என்னும் இதனையும் மிகையாக நினைப்பவன் இவர் பற்றிய இறைவன். இளையபெருமாளுடைய நாண் ஒலியினைக் கேட்ட மகாராஜர், கழுத்தில் அணிந்திருந்த மாலையினை அறுத்து எறிந்து, குரங்குகள் இயற்கையாகச் செய்கின்ற தொழில்கள் சிலவற்றைச் செய்துகொண்டு அருகே நின்ற திருவடியைப் பார்த்து, ‘இச்சமயத்தில் நாம் செய்யத்தக்கன யாவை?’ என்று கேட்க, ‘அபராத காலத்தில் அநுதாபம் பிறந்து மீண்டோம் என்று நினைப்பதற்கு எளியன் அல்லோம்; சில செய்வோம்; தீரக் கழிய அபராதம் பண்ணினோம்; செய்த பின்னர் இனி, ஓர் அஞ்சலி நேராமற் போகாது,’ என்ற கருத்து அமைய, 2‘செய்யப்பட்ட பாவங்களையுடைய உனக்கு இலக்குமணனைக் கண்டு இரு கைகளையும் கூப்பி வணங்கி, அதன் திருவருளைப் பெறுதல் தவிர, அவனைப் பொறுப்பிக்கைக்கு வேறு வழி ஒன்றையுங் காணேன்,’ என்றான் திருவடி என்று கூறும் ஸ்ரீ ராமாயணமும் இங்கு அறிதல் தகும்.

    அவர் அவர் இறையவர் குறைவு இலர் - அவ்வத்தேவர்கள் தம்மை வணங்கும் மக்களுக்கு வேண்டும் வரங்களைக் கொடுத்தலில் குறைவு இல்லாதவரேயாவர். இனி, ‘அவர் அவர் இறையவர்’ என்பதற்கும், ‘அவ்வம்மக்களால் வணங்கப்படுகின்ற தேவர்கள்’ என்று பொருள் கூறலும் ஒன்று. ‘அதற்குக் காரணம் யாது?’ எனின், இறையவர் பொதுவிலே இறையவர் என்கிறார்; அவர்களோடு அவர்கள் வணங்கும் தேவர்களோடு தம்மோடு வாசி அற, 3‘பரமாத்துமாவானவன் உலகிற்கு எல்லாம் இறைவன்,’ என்கிறபடியே, எல்லார்க்கும் ஒக்க இறைவனாதலின். அவர் அவர் விதிவழி அடைய நின்றனர் - அவ்வத்தேவர்கள் தத்தம் ஆகமங்களிலே ‘என்னை உபாசனை செய்,’ என்று விதித்து வைத்த வழிகளால் மக்கள் அவர்களையடைந்து பலத்தைப் பெறும்படியாக அவ்வத் தேவர்களுடைய உயிர்களுக்குள் உயிராய் நின்றார். இனி, ‘அவர் அவர் விதிவழி அடைய நின்றனர்,’ என்பதற்கு 4‘எவன் எவன் பத்தியுள்ளவனாகி எவ்வெத்தேவர்களை வணங்குவதற்கு விரும்புகின்றானோ, அவன் அவனுக்கு அவ்வத்தேவர்களை வணங்குதற்கு

 

1. திருவாய். 9. 3 : 9.
2. ஸ்ரீராமா. கிஷ்.
3. தைத்திரீய நாராய. 6. 1 : 11.
4. பகவத்கீதை. 7 : 21.