முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
89

    வி-கு : ‘தொறும்’ என்பது இடப்பன்மையினைக் காட்டும் இடைச்சொல், ‘உடல்மிசை உயிர் என’ என்பது, சரீர ஆத்துமபாவத்தை விளக்க வந்த உவமை ‘உண்ட’ என்பது ஈண்டு அழித்த என்னும் பொருட்டு. ‘கரந்து, எங்கும் பரந்து, சுருதியுள் உளன்’ எனக் கூட்டுக. சுருதி - வேதம்; ஆசிரிய மாணாக்க முறையில் கேட்கப்பட்டு வருவது என்பது பொருள்.

    ஈடு :
ஏழாம்பாட்டு. 1சரீர ஆத்துமபாவத்தைப் பிற்கூறுவோம் என்று தம் திருவுள்ளத்திற்கொண்டு, மேல், சாமாநாதிகரண்ய நியாயத்தால் அருளிச்செய்தார்; அந்த நியாயத்தால் அங்குக் கிடைத்த சரீர ஆத்துமபாவத்தை இச்செய்யுளில் அருளிச்செய்கிறார். இனி, மேல் சாமாநாதிகரண்யத்தாலும் வையதிகரண்யத்தாலும் அருளிச்செய்தார்; அப்படி அருளிச்செய்த ஐக்கியத்திற்குக் காரணம், சரீர ஆத்தும பாவம் என்று அச்சரீர ஆத்தும பாவத்தை இங்கு அருளிச்செய்கிறார் என்றலும் ஆம். அதாவது, 2‘இந்த உயிர்களை எல்லாம் உடலாகக் கொண்டு இருக்கிற நான், உயிர்களுக்குள் உயிராகப் புகுந்து இவற்றிற்குப் பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணுகிறேன்,’ என்கிறபடியே பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட இவ்வுடலிலே உயிர் வழியாக உள்ளே புகுந்து அவை பொருளாதல், பெயர் பெறுதல் உண்டாகும்படி செய்து, இவை

 

1. இத்திருப்பாசுரத்திற்கு இரண்டு வகையில் அவதாரிகை அருளிச்செய்கிறார்.
  ‘ஒன்று, மேல் சாமாநாதிகரண்யத்தால் அருளிச்செய்தார்; அதனால் கிடைத்த
  சரீர ஆத்துமபாவத்தை இங்கு விளக்குகிறார்’ என்பது. இங்கு ‘மேல்’ என்றது,
  ‘நாமவன்’, ‘நின்றனர்’ என்ற பாசுரங்களை. இரண்டாவது, ‘மேல்,
  சாமாநாதிகரண்யத்தாலும் வையதிகரண்யத்தாலும் அருளிச்செய்தார், அவ்வாறு
  அருளிச்செய்ததற்குக் காரணம், சரீர ஆத்துமபாவம் என்று அதனை இங்கு
  அருளிச்செய்கிறார்,’ என்பது இங்கு ‘மேல்’ என்றது, ‘நாமவன்’, ‘நின்றனர்’
  என்ற பாசுரங்களையும், ‘இலனது’, ‘அவரவர்’ என்ற பாசுரங்களையும் ஆம்,
  சமாநமான அதிகரணத்தையுடையது, சாமாநாதிகரண்யம்; வேறுபட்ட
  அதிகரணத்தையுடையது வையதிகரண்யம்; சமானம் - ஒன்று, அதிகரணம் -
  இடம். வேதங்களில் அபேதசுருதி, பேத சுருதி இரண்டையும்
  சேர்த்துக்காட்டும் கடக சுருதி என்னும் மூவகை வாக்கியங்கள் இருத்தலை
  ஈண்டு அறிதல் தகும். அபேத சுருதியின் பொருள், ‘நாமவன்,’ ‘நின்றனர்’
  என்ற பாசுரங்கள். பேத சுருதியின் பொருள், ‘இலனது’, ‘அவரவர்’ என்ற
  பாசுரங்கள். கடக சுருதியின் பொருள் ‘திடவிசும்பெரி’ என்னும்
  இத்திருப்பாசுரம்.

2. சாந்தோக்யம், 6 : 3.