முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
94

New Page 1

தோடு நிறைந்ததும், காரண பரம்பரையோடு காரிய பரம்பரையோடு வாசியறத் தானே நின்று நடத்திக்கொண்டு போருகையாலே ‘வரன் முதல் ஆய்’ என்கிறார்.

    அவை முழுது உண்ட - அழிக்குங்காலம் வந்தால் அவற்றை முழுவதும் அழிக்கின்றவனும் அவனே. 1‘யாவன் ஒருவனுக்குப் பிராமண க்ஷத்திரிய சாதிகள் இரண்டும் உணவாக இருக்கின்றன? யாவன் ஒருவனுக்கு யமதருமன் ஊறுகாய் நிலையிலே இருக்கின்றான்? அப்படி இருக்கிறவன் பெருமை ஒருவருக்கு அறிய நிலமோ?’ என்று கடவல்லி உபநிடதம் கூறுகின்றது. இங்ஙனம் உணவாகக் கூறப் படுதலின், இவரும், உணவின் தொழிலாகிய ‘உண்ட’ என்னும் சொல்லால் அழித்தலை அருளிச் செய்கிறார். பரபரன் - பிரமன் முதலிய தேவர்கள் அதிகாரி புருஷர்களாக இருக்கையாலே நம்மைக் குறிக்க அவர்கள் மேலானவர்களாய் இருப்பது ஒன்று உண்டு; 2‘உயர்ந்தவர்கட்கு எல்லாம் உயர்ந்தவன் இறைவன்,’ என்கிறபடியே, அவர்கள்தங்களுக்கும் மேலானவனாய் இருக்குமவன். 3‘மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவா, ‘என்பது தமிழ் மறை.

    புரம் ஒரு மூன்று எரித்து - சிவன் முப்புரங்களை எரித்தான் என்றும், அமரர்க்கு அறிவியந்து - 4அறிவை ஈந்து; அன்றி, வியத்தில் - கடத்தலும், கொடுத்தலும் ஆகையாலே, அறிவைக் கொடுத்து என்னவுமாம். ‘பிரமன் தேவர்கட்கு ஞானத்தைக் கொடுத்தான் என்றும் ஒரு பிரசித்தி உண்டு அன்றே நாட்டிலே அவர்கட்கு? அவ்வாறு அன்றோ அவர்கள் ஏற்றங்களும் இருக்கின்றன?’ என்னில், ‘நன்று; சிவன் திரிபுரம் எரித்தவனை ஆராய்வோம்; 5‘மிக்க ஒளியினையுடைய உருத்திர பகவானுக்குத் திருமால் உயிராக இருக்கின்றார்; ஆதலால், அந்தச் சிவபெருமான் வில்லினுடைய நாணினைத் தொடும் ஆற்றலையடைந்தான்’ என்றார் அடி அறியும் வியாச

 

1. கடவல்லி. 1 : 2.

2. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 2 : 10.

3. திருவாய், 8. 1 : 5.

4. ‘அறிவியந்து’ என்பதனை ‘அறிவு இயந்து’ என்று பதம் பிரித்தல்
  வேண்டும்: இயந்து என்பது ஈந்து என்ற சொல்லின் விகாரம்; ஈந்து -
  கொடுத்து.

5. பாரதம் காண்பர்.