முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
95

New Page 1

முனிவர். 1‘தழல்நிறவண்ணன் நண்ணார் நகரம், விழநனி மலைசிலை வளைவு செய்தங்கு, அழல்நிற அம்பது ஆனவனே’ என்றார் மயர்வற மதிநல மருளப்பெற்றவர். 2ஆதலால், தான் பூட்டின நாணி தன் கழுத்தை அறுத்துக்கொண்டு போகாது ஒழியும்போதும் திருமால் அந்தராத்துமாவாய் நிற்றல் வேண்டும். நிற்க, இனி, பிரமன் தேவர்கட்கு ஞானத்தினைக் கொடுத்தான் என்பதை ஆராய்ந்தால், 3‘நாராயணன் உலகங்களை எல்லாம் படைப்பதற்கு முன்னர்ப், பிரமனை முதலில் படைத்தான்; அப்பிரமனுக்கு வேதங்களைக் கற்பித்தான்,’ என்கிறபடியே, அதற்கும் இறைவன் அடியாக இருப்பான்.

    அறன் என உலகு அழித்து உளன் அயன் என உலகு அமைத்து உளன் - ‘அரன் செய்தான்; அயன் செய்தான்’ என்ன உலகையழித்தும் அமைத்தும் உளன். 4‘பிரமன் சிவன் என்னும் இவர்கள் இருவரும் தேவர்களுக்குள் தலைமை பெற்றவர்கள்; இறைவன் தெளிந்திருந்த காலத்தும் கோபத்துடன் இருந்த காலத்தும் உண்டானவர்களாக எண்ணப்படுகிறார்கள்; இவர்கள், அவ்விறைவனாலே காட்டப்பட்ட வழிகளையுடையவர்களாய், படைத்தல் அழித்தல்களாகிய காரியங்களைச் செய்கிறார்கள்,’ என்று இவ்வாறு பிரமாணங்கள் உள்ளபடியால் படைப்பில் ஒரு பகுதியும் அழிப்பில் ஒரு பகுதியுமே அவர்களுக்கு உள்ளவை; அவைதாமும், அவர்களுக்கு அந்தராத்துமாவாக நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்கிறான் சர்வேஸ்வரன். ஆகையாலே, சொன்னேன் அத்தனை; ஒருவனிடத்திலே பக்ஷபாதத்தாலே சொன்னேன் அல்லேன்,’ என்று குத்ருஷ்டிகளை மறுக்கிறார்.

(8)

 9

        உளன்எனில் உளன்அவன் உருவம்இவ் வுருவுகள்
        உளன்அலன் எனில்அவன் அருவம்இவ் வருவுகள்
        உளன்என இலன்என இவைகுணம் உடைமையில்
        உளன்இரு தகைமையொடு ஒழிவுஇலன் பரந்தே.

 

1. பெரிய திருமொழி, 6. 1 : 3.

2. ‘செல்விடைப் பாகன் திரிபுரஞ் செற்றுழிக், கல்லுயர் சென்னி இமயவில்
  நாணாகித், தொல்புகழ் தந்தாருந் தாம்’ என்னும் பரிபாடற்பகுதி இங்கு
  ஒப்பு நோக்குக.

3. சுவேதாஸ்வதரம்.

4. பாரதம். சாந்தி பர். 169.