முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
105

1பத

1பத்தியின் வகை இரண்டனுள் எவ்வகையான பத்தியினை இங்கு அருளிச்செய்கின்றார்?’ எனின், ‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று இவர் தாம் பெற்றது 2பத்தியின் நிலையினை அடைந்த ஞானமாய் இருந்தது; தாம் பெற்றது ஒன்றும் இங்குக் கூறுவது ஒன்றுமாக ஒண்ணாதே! அவ்வாறு கூறுவராயின், 3விப்ரலம்பக கோடியிலே ஆவரே. ஆதலால், 4தாம் பெற்ற அதனையே பிறர்க்கு உபதேசிக்கின்றார் எனல் அமையும். ‘ஆயின், பத்தி என்பது 5‘கர்ம ஞானங்கள் இரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட மனத்தையுடையவனுக்கு’ என்கிறபடியே, கர்ம ஞானங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப்பட்ட மனத்தினையுடையவனுக்கு உண்டாவது அன்றோ? இவருக்கு அந்தப் பத்தி வந்த வழி யாது?’ எனின், இவருடைய பத்திதான், அந்த ஞான கர்மங்களினுடைய இடத்தில் இறைவனுடைய திருவருள் நிற்க, அது அடியாகப் பின்னர் விளைந்தது அன்றே! ‘இதுதான் வேதாந்தங்களில் கூறப்பட்டதான பத்திதானே ஆனாலோ?’ என்னில், 6சர்வேஸ்வரன் அருள இவர் பெற்றாராகிற ஏற்றம் போம்; 7அபசூத்ராதிகரண நியாயமும் பிரசங்கிக்கும்; ஆதலால், அங்ஙனம் கூற ஒண்ணாது.

 

1. பத்தியின் வகை இரண்டு : சாதனபத்தி, சாத்தியபத்தி என்பனவாம். சாதன
  பத்தியாவது, மோக்ஷத்தை அடைவதற்குச் சாதனமாகக் கொள்ளப்படும் பத்தி.
  சாத்திய பத்தியாவது, பத்தியே பலமாக இருப்பது. சாத்தியம் - பலம்.
  அதாவது, எம்பெருமானாகிய சாதனத்தால் பலமாகக் கிடைத்த பத்தி
  என்றபடி.

2. ‘பத்தியின் நிலையினையடைந்த அறிவாய் இருந்தது,’ என்றது, சாத்திய
  பத்தியினைக் குறித்தபடி.

3. விப்ரலம்பககோடி - உள்ளதை உள்ளவாறு கூறாது மறைத்துப் புகலுவோர்
  கூட்டம்.

4. ‘தாம் பெற்றவதனையே’ என்றது, தாம் பெற்ற சாத்திய பத்தியினையே
  பிறர்க்கும் உபதேசிக்கிறார் என்றபடி.

5. ஆத்தும சித்தி.

6. ‘ஏற்றம்போம்’ என்றது, ‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்ற ஏற்றம்
  போம் என்றபடி.

7. ‘அபசூத்திராதிகரண நியாயமும் பிரசங்கிக்கும்’ என்றது, நான்காம்
  வருணத்தார் சாதனபத்தியை மேற்கொள்ளத் தக்கவர் அல்லர் என்னும்
  அபசூத்திராதிகரண நியாயத்துக்கு விரோதமும் உண்டாகும் என்றபடி.