முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
107

அன

அன்று; 1‘ஒரு வருடம் குருகுலவாசம் செய்யாத மாணவனுக்குச் சொல்லக்கடவன் அல்லன்,’ என்னும் விதிக்குக்கட்டுப்பட்டவராயும் அன்று.

    ‘ஆயின், இது பின்னர் எத்தாலே ஆவது?’ என்னில், கூறுவேன் : தாம் நுகர்ந்த நுகர்ச்சியின் இன்பப் பெருக்கு இருக்கிறபடி. தாம் நுகர்ந்த பொருள் தனியே நுகருமது அன்றிக்கே இருந்தது; ஆதலால், ‘நாம் ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு நுகர்தற்கு ஆளாவார் யாவர்?’ என்று நினைந்து சம்சாரிகள் பக்கல் கண்வைத்தார்; தாம் இறைவன்பால் காதல் கரை புரண்டு நிற்பது போன்று அவர்கள் ஐம்புல ஆசையில் அறிவு மயங்கியிருந்தார்கள்; கண்டதும் அவர்கள் கேட்டினை நீக்கியல்லது நிற்க ஒண்ணாத நிலையினை அடைந்தார். ‘என்னை?’ எனின், ‘வைஷ்ணவதர்மம்’ அதுவாதலின், ‘ஒருவனுக்கு வைணவத்துவமுண்டு, இல்லை என்னும் இடம் தனக்கே தெரியுங்காண்’ என்று 2சீயர் பலகாலும் அருளிச்செய்வர்; அதாவது, பிறர் அநர்த்தம் கண்டால் ‘ஐயோ!’ என்று இரங்குவானாகில், அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று இருக்க அடுக்கும்; ‘இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு’ என்று இருந்தானாகில், அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தமில்லை’ என்று இருக்க அடுக்கும் என்றபடி. ‘ஆயின், அவர்களை இவர் மீட்கப் பார்க்கிற வழிதான் என்?’என்னில், இவர்கள் அறிவு உள்ளவர்களாய் இருக்கிறார்கள்; ஐம்புல இன்பங்களுள் வாசியறிந்து, தீயவை கழித்து, நல்லவை பற்றி அனுபவிக்கும் தன்மை இவர்களிடத்தில் இருக்கிறது; ஆதலால், அவர்கள் பற்றியிருக்கும் பொருள்களின் தாழ்வினையும், பற்றத்தக்க இறைவனுடைய மேன்மையினையும் இவர்களுக்கு அறிவித்தால், அவற்றை விட்டு இறைவனைப் பற்றக்கூடும் என்று பார்த்து, 3இறைவனுடைய நன்மையினையும், இவர்கள் பற்றியுள்ள பொருள்கள் அற்பம், நிலையின்மை முதலிய குற்றங்களால் கேடு அடைந்தவை

 

1. ‘வீடுமின்’ என்று பலரைக் குறித்துப் பரோபதேசம் செய்கையாலே ‘ஒரு
  வருடம்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். இது, முண்டக உபநிடதம்,
  1. 2 : 13.

2. சீயர் - நஞ்சீயர்.

3. இத்திருவாய்மொழியில் வந்துள்ள ‘எல்லையில் அந்நலம்’ என்றதனைப்
  பற்றி, ‘இறைவனுடைய நன்மையினை’ என்கிறார். ‘மின்னின் நிலையில்’
  என்றதனைப்பற்றி, ‘இவர்கள் பற்றியுள்ள பொருள்கள். . .கேடு அடைந்தவை’
  என்கிறார். ‘அது செற்று’ என்றதனைப்பற்றி, ‘பற்றுமிடத்தில் வரும்
  இடையூருகளை நீக்குந்தன்மையினையும்’ என்கிறார்.