முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
114

    இவை வேர் முதல் மாய்த்து - இவற்றை வேர்முதல் மாய்க்கையாவது, உறுதிப்பொருள் அன்று என்னும் நினைவு உண்டாதல். இரண்டு மரங்கள் சேர நின்றால், ஒன்றிலே தொளைத்துப் பெருங்காயத்தை வைக்கச் சில நாள் ஒன்று போலே நின்று, பின்னைப் பட்டுப் போகாநின்றது; அப்படியே, யான் எனது என்னும் செருக்கு விடத்தக்கது என்னும் நினைவு உண்டாகத் தன்னடையே சம்சாரம் அடி அற்று நிற்கும் என்றபடி. 1‘உயிர் அல்லாத சரீரத்தில் உயிர் என்ற புத்தியும், தன்னைச் சார்ந்தன அல்லாதவைகளில் தன்னுடையவை என்னும் புத்தியும், அறிவின்மையாகிற மரம் தோன்றுவதற்கு இரண்டு விதைகளாய் இருக்கின்றன’, எனப் பிறப்பு ஈனும் வித்து இன்னது என்றும், 2‘அடியார்களை நழுவ விடாத அச்சுதனே! நான் உனக்கு அடியவனாய் இருக்கிறேன் என்று நினைக்கும் அறிவானது, பிறப்பினை மாற்றுதற்கு மருந்தாக இருக்கின்றது’, என அதனை நீக்குதற்கு வழி இன்னது என்றும் ஸ்ரீவிஷ்ணு புராணம் கூறுகின்றது. ஆதலால், அளிக்குமவன் ‘எப்போது பாதுகாப்போம்’ என்று சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இவன் பக்கல் விலக்காமை உண்டானால் விரோதி போகத் தட்டு இல்லை என்கை.

    இறை சேர்மின் - அடையத் தக்கன அல்லாதவற்றை நீக்கி வகுத்த 3சேஷியானவனைப் பற்றப் பாருங்கோள். சம்சாரி இறைவனை அடைதல், கெடுமரக்கலம் கரை சேர்ந்தாற்போன்று இருக்கையாலே ‘சேர்மின்’ என்கிறார். உயிர்க்கு அதன் நேர் நிறை இல் - இத்தோடு ஒக்கச் சீரியது இல்லை என்னுதல்; நேர் என்று ஒப்பாய், நிறை என்று மிகுதியாய், உயிர்க்கு இத்தோடு ஒத்ததும் மிக்கதும் இல்லை என்னுதல். ஞான ஆனந்தங்களை இலக்கணமாகவுடைய ஆத்துமாவிற்கு, முதலில் ஹிதமுமாய் அடுத்த கணத்தில் பிரியமுமாய் இருக்கும் இத்தோடு ஒக்கும் சீரியது இல்லை என்றபடி. 4‘பிறப்பாகிய பெருங்கடலில் மூழ்கினவர்களாய் ஐம்புலன்களாகிற நீர் வாழ் பிராணிகளால் இழுக்கப்படுகின்றவர்களாய் உள்ள மக்களுக்கு, எங்கும் நிறைந்திருக்கிற விஷ்ணுவாகிற ஓடத்தினைத் தவிர, சிறந்த

 

1. 2. ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 11.
3.  சேஷி - தலைவன்.
4. விஷ்ணு தர்மம், 122.