முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
120

இடம

இடம் தெரிந்தது இல்லையோ?’ 1என்றும் ‘ஒக்கச் சஞ்சரிக்கிற வழியிலே நிதி எடுப்பாரைப்போலே, என்னுடைய அடிமைக்குத் தக்கதான தொழிலிலே சேர்ந்து அவன் விருப்பின்படி என்னை உபயோகித்துக்கொள்ள எதிர்பாராநின்றேன்,’ என்றும் கூறினார் என்று விஷ்ணு புராணம் கூறுமாற்றால் அறிதல் தகும்

    முற்றவும் நின்றனன் - 2‘எல்லாப் பிராணிகளுக்கும் நான் ஒத்தவன்; எனக்கு எவனும் பகைவன் இலன்; அன்பனும் இலன்; எவர்கள் என்னைப் பத்தியால் அடைகின்றார்களோ, அவர்கள் போலவே நானும் அவர்களிடத்தில் அன்புடன் வசிக்கின்றேன்,’ என்கிறபடியே அடையும் திறத்தில் ஒத்தவனாய் இருந்தான். 3இத்தலை இருந்தபடி இருக்கத் தான் எல்லார்க்கும் ஒத்திருக்கை. பற்றிலையாய் - நீயும் பற்றினையுடையையாய். அவன் முற்றில் அடங்கு - 4‘நான் எல்லா அடிமைகளும் செய்வேன்,’ என்கிறபடியே, அவனுடைய எல்லாத் தொண்டுகளிலும் சேர்வாய்.

 

1. ‘என்றும் ஒக்கச் சஞ்சரிக்கிற வழியிலே நிதி எடுப்பாரைப் போலே’ என்ற
  வாக்கியத்துக்குக் கருத்து, ‘என்னுடைய சொரூபம் அநாதியாய் இருக்க
  இழந்திருந்த நான், இப்போது ஒரு முயற்சியும் இன்றியே காணப்பெற்றேன்,’
  என்பதாம்.

2. ஸ்ரீ கீதை. 9 : 24. இங்கு, ‘கடுநவையுண்டாக வருத்தும் வெகுளியும் அருளும்
  கோட்டமும் செப்பமும் ஆகிய மறமும் அறமும் உடையாரிடத்து
  உடையையாய் இல்லாரிடத்து இல்லாயாய் இருத்தல் அல்லது
  மாற்றாருயிரின்கண்ணும் கேளிருயிரின்கண்ணும் அதனை மாற்று
  தற்றொழிலும் அதற்கு எமஞ்செய்தற்றொழிலும் உடையையல்லை; நினக்கு
  மாற்றோரும் கேளிரும் இலராதலான். என்றது, குற்றமாகிய மறமுடையாரிடத்து
  இல்லையாதலும், குணமாகிய அறமுடையாரிடத்து அருளும்
  செம்மையுமுடையையாய் அஃதில்லாரிடத்து இல்லையாதலுமல்லது நினக்குப்
  பகையாயினாருயிரின்கண் அதனை மாற்றுதற்றொழிலும் நினக்குக்
  கேளிராயினாருயிரின்கண் அதற்கு ஏமஞ்செய்தற்றொழிலும் உடையையல்லை;
  அவ்விரு திறத்தாரும் நினக்கு இன்மையான் என்றவாறு,’ என்ற பரிபாடல்
  உரைப்பகுதி ஒப்பு நோக்கல் தகும்.

(4 : 49-55).

3. ‘இத்தலை இருந்தபடி இருக்க’ என்றதற்குக் கருத்து, பிறப்பாலும்
  ஒழுக்கத்தாலும் ஞானத்தாலும் அவ்வுயிர்கள் இருந்த நிலையிலேயே
  இருந்துகொண்டு இருக்க என்பதாம்.

4. ஸ்ரீராமா. அயோத். 31, 25.