முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
131

உவ

உவமை; ‘தேவரீருடைய குணங்கள் அன்றோ எங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றன?’ என்கிறபடியே, இறைவனுடைய நற்குணங்களைப் போன்று, இவ்வுயிர்களும் நித்தியமுமாய்ப் பிரகாரமுமாய் இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி. ஆக, நித்தியரான 2மூவகைப்பட்ட சேதனரையும், நித்தியமான கல்யாண குணங்களையும் உடையவன் நாராயணன் என்பதாயிற்று. திண்கழல் சேர் - அடியார்களை ஒருகாலும் விட்டுக்கொடாத திண்மையைப் பற்றத் ‘திண்கழல்’ என்கிறார்: ‘இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள சம்பந்தம் ஒரு காலத்தில் வந்தது அன்று; என்றும் உள்ளது ஒன்று,’ என்னும் ஞானமுடையாரை ஒரு நாளும் விடான் அன்றே! சேர் - அடைவாய். 3உன்னுடையதாய், உனக்கு வகுத்ததாய் இருந்த பின்பு நீ கடுக உட்கொள்: ‘நம:’ என்றபடி.

(10)

22

        சேர்த்தடத் தென்குரு, கூர்ச்சட கோபன்சொல்
        சீர்த்தொடை ஆயிரத்து, ஓர்த்தஇப் பத்தே.

    பொ-ரை : தடாகங்கள் சேர்ந்திருக்கிற அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர், இறைவனுடைய மிக்க புகழைத் தொடுத்து அருளிச்செய்த ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களும் ஆராய்ந்து செய்யப்பட்டவை என்பதாம்.

    ஈடு :
முதற்பாட்டில், ‘வேறுபட்ட பொருள்களை விட்டு, சர்வேஸ்வரன் பக்கல் ஆத்துமாவைச் சமர்ப்பிக்க இசைமின்,’ என்றார்; இரண்டாம் பாட்டில், ‘வேறுபட்ட பொருள்களின் குற்றங்களைக் கண்ட அளவில் விடலாம்,’ என்றார்; மூன்றாம் பாட்டில், விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச்செய்தார்; நான்காம் பாட்டில் பற்றப் படுகிற பொருளின் நன்மையினை அருளிச்செய்தார்; ஐந்தாம் பாட்டில், பற்றுமிடத்தில், வரும் தடைகளை நீக்கும் வழியினை அருளிச் செய்தார்; ஆறாம் பாட்டில், இறைவன் அன்பே உருவமானவன்,’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘சம்பந்த ஞானம் உண்டாகவே பொருந்தலாம்,’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘வேறு உபகரணம் தேட

 

1. ஸ்ரீ வைகுண்டராஜ ஸ்தவம், 35.

2. மூவகைப்பட்ட சேதனர் - நித்தர், முத்தர், பத்தர் என்பவர்கள். பத்தர்
  என்றது - சம்சாரிகளை.

3. ‘நாராயணன்’ என்ற பதத்திற்கு, அன்மொழித்தொகையாகவும்
  வேற்றுமைத்தொகையாகவும் சொல்லப்படும் இருவகைப்பொருள்களையும்
  நோக்கி, ‘உன்னுடையதாய், உனக்கு வகுத்ததாய்’ என்கிறார். ‘சேர்’ என்பது
  ‘நம:’ என்ற சொல்லின் பொருள் ஆதலின், ‘நம: என்றபடி’ என்கிறார்.