முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
138

1

1‘நண்பன் என்ற பாவனையைக்கொண்டு வந்த இவ்விபீடணனை நான் ஏற்றுக்கொள்ளாது விடமாட்டேன்,’ என்னுமவன் ஆதலானும், பத்தியின் தொடக்கத்தையே சொல்லுகிறது. மேலும், ஆசை சிறிது உடையார்க்கும் தன்னைக் கொடுப்பதாக 2இறைவனுடைய திருவார்த்தை இருந்தது ஆதலானும், 3‘எதிர் சூழல் புக்கு’ என்றும், 4‘என்னின் முன்னம் பாரித்து’ என்றும் விலக்காமை தேடித் திரிவான் ஒருவன் ஆதலானும் மேலதே பொருள்.

    உடை-இந்த விலக்காமை பகையாமை மாத்திரத்தையே கனத்த உடைமையாகச் சொல்லுகிறார். (உடைமை - செல்வம்) ‘இவை கனத்த உடைமை ஆகுமோ?’ எனின், இவ்வுலகில் இறைவனிடத்தில் பத்தியினைச் செலுத்துகின்றவர்களை 5‘விண்ணுளாரிலும் சீரியர்’ என்கிறபடியே, நித்தியசூரிகளைக்காட்டிலும் கனக்க நினைத்திருக்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார். ‘இறைவன் நினைத்திருப்பானோ?’ எனின், இவர்கள் பக்கலிலே 6இவ்வளவு உண்டானால், பின்னை ‘இவர்களுடைய பாரத்துக்கு எல்லாம் நானே கடவன்,’ என்று இருப்பவன் இறைவன்; மேலும் இராவண பவனத்தை விட்டு ஆகாசத்தில் கிளம்பின போதே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மி குடி கொண்டபடியினால் அன்றோ, 7விபீடணனை, ‘ஆகாயத்தை அடைந்த ஸ்ரீமான்’ என்றார்? 8‘இலக்குமணன் லக்ஷ்மியால் நிறையப் பெற்றவன்’ என்றார் இளைய பெருமாளை. இது அன்றோ இவனுக்கு நிலை நின்ற ஐசுவரியம்; இத்தைப் பற்ற ‘உடை’ என்கிறார். (இது உடைமை என்ற சொல்லின் விகாரம்.) அடிய

 

1. ஸ்ரீ ராமா. யுத். 18 : 3.

2. ‘இறைவனுடைய திருவார்த்தை’ என்றது, சரமசுலோகத்தை.

3. திருவாய். 2. 7 : 6.

4. திருவாய். 9. 6 : 10.

5. திருவிருத்தம், 79.

6. ‘இவ்வளவு உண்டானால்’ என்றது, ‘விலக்காமை, பகையாமை என்னும்
  இக்குணங்கள் மாத்திரம் உண்டானால்’ என்றபடி, ‘இவர்களுடைய பாரத்துக்கு
  எல்லாம் நானே கடவன்,’ என்றது, ‘என்னைப் பற்று; உன்னைப்
  பாவங்களினின்றும் விடுவிக்கிறேன்; பயப்பட வேண்டா,’ என்று
  சரமசுலோகத்திற்கூறியதை நோக்கி.

7. ஸ்ரீராமா. யுத். 16. 17.

8. ஸ்ரீராமா. பால. 18 28.