முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
144

அன

அன்றோ இப்படிக்கட்டுண்டு இருக்கிறான்? பிரமன் முதலியோரைத் தன் சங்கற்பத்தாலே கட்டுவதும் விடுவதும் ஆகின்றவன் அன்றோ இப்போது ஓர் அபலை கையால் கட்டுண்டிருக்கின்றான்? ‘ஆயின், இப்படிக் கட்டுண்கைக்குக் காரணம் யாது?’ எனின், 1‘எனது அவதாரத்தையும் அவதாரத்தில் நிகழ்த்தும் நிகழ்ச்சிகளையும் தெய்வத்தன்மை வாய்ந்தவை என்று எவன் அறிகிறானோ அவன் இச்சரீரத்தை விட்டால் வேறு சரீரத்தை அடைகிறான் இல்லை; என்னையே அடைகிறான்,’ என்கிறபடியே, நம்முடைய கட்டை அவிழ்க்கையே காரணமாம்.

    உரலினொடு இணைந்து இருந்து-உரலுக்கு ஒரு தொழில் செய்யுந் தன்மை உள்ளதாயின், தனக்கு ஒரு தொழில் செய்யுந்தன்மை உள்ளது என்று தோற்ற இருந்தபடி. ஏங்கிய - உரலைக்காட்டிலும் வேற்றுமை இத்தனையே காணும். அதாவது, அழப் புக்கவாறே ‘வாய் வாய்’ என்னுமே; பின்னை அழமாட்டாதே ஏங்கி இருக்கும் இத்தனை. எளிவு-எளிமை. எத்திறம்-பிரானே, இது என்ன பிரகாரம்? இன்னம் மேன்மை தரை காணலாம்; நீர்மை தரை காண ஒண்ணாதாய் இருந்ததே! ‘உயர்வற உயர்நலம் உடையவன்’ என்கிற மேன்மையிலே போவேன் என்கிறார். ஏவப்படுகின்றவனாய் இருக்கிற இருப்பில் ஏவுகின்றவனாய் இருக்கிற இருப்புப் பேசக்கூடியதாய் இருந்தது என்றபடி. பேசப் புக்க வேதங்களும் ‘அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றனவோ?’ என்றதும் மேன்மையிலேயே; ‘நிலம் அன்று என்கைக்கும் நிலம் அன்று அன்றே நீர்மை? இவ்வெளிமை ஏனையோர் பக்கலிலும் காணலாமே?’ எனின், இத்தனை தாழநில்லாமையாலே சம்சாரிகள் பக்கல் காண ஒண்ணாது; பரத்துவத்தில் இந்நீர்மை இல்லை. ‘ஆயின், உலகத்தில் களவு காண்பாரும் கட்டுண்பாரும் இலரோ? இவன் செயலுக்கு இத்தனை ஈடுபட வேண்டுமோ?’ எனின், பெரியவன் தாழ்ச்சி ஆகையாலே பொறுக்க மாட்டுகின்றிலர்.

(1)

24

        எளிவரும் இயல்வினன் நிலைவரம்பு இலபல பிறப்பாய்
        ஒளிவரும் முழுநலம் முதல்இல கேடுஇல வீடாம்
        தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
        அளிவரு மருளினோடு அகத்தனன்புறத்தனன் அமைந்தே.

    பொ-ரை : இறைவன், குளிர்ந்த பக்குவமான திருவகுளோடே அடியார்கட்கு அகத்தனனாயும் அல்லாதார்க்குப் புறத்தனனாயும்

 

1. ஸ்ரீ கீதை. 4. 9.