முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
226

அன

அன்றே அகலப்பார்த்தீர்? நீர் அகலவே, ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவேயுடைய பெரியவர்களாலேயே அடையத் தக்கவன் நான் என்று நினைத்து என்னை ஒருவரும் சாரார்; இப்படித் தண்ணியராக நினைந்திருக்கிற நீர் ஒருவரும் என்னைக் கிட்டவே, நான், ‘இன்னார் இனியார் என்னும் வேறுபாடு இன்றி எல்லாரும் வந்து சேரத்தக்கவன்; என்று தோற்றும்; ஆன பின்னர், நீர் அகலுமதுவே எனக்குத் தாழ்வு. மற்றும், ‘எனக்கு ஆகாதார் இலர் என்னுமிடம் பண்டே 1அடிபட்டுக்காணுங் கிடப்பது, நான், நல்லார் தீயார் என்று நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் என் காலை வைத்ததைக் கண்டீரே,’ எனத் தான் திருவுலகு அளந்தருளின எளிமையைக்காட்ட, ‘ஆகில் கிட்டுவோம்’ என்று நினைந்தார்; உடனே, ‘நம்மால் வரும் மேன்மையும் இவனுக்கு வேண்டா,’ என்று ‘பின்னையும் அகலப்புக, ‘உம்மால் வரும் மேன்மையேயன்றோ நீர் வேண்டாதது? உம்மால் வரும் நான்தான் வேண்டுமோ, வேண்டாவோ? நீர் தாழ்ந்தவர் என்று அகலுமதிலும் சேர்கிறது, திருவாய்ப்பாடியில் வெண்ணெயினைப் போன்று எனக்குத் தாரகங்காணும்; இனி, நீர் அகலில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க உலகம் புகுதல் திண்ணம்; நீர் அகலுமது என்னுடைய இருப்புக்குக் கேடு,’ என்று கூறி, பின்னர் 3‘நட்பு உணர்ச்சியோடு வந்து சேர்ந்த இந்த விபீடணன் வஞ்சனையுள்ளவன் ஆகவுமாம்; நான் இவனை விடில் உளேன் ஆகேன்,’ என்று சேர்த்துக் கொண்டாற்போலவும், ‘உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாளப் பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்,’ என்ற அருச்சுனனை, 4‘கிருஷ்ணா, உனது அருளால் உண்மை ஞானத்தை அடைந்தேன்; திரிபு உணர்ச்சியானது என்னை விட்டு நீங்கிற்று; ஐயவுணர்வும் நீங்கினவள் ஆனேன்; ஆதலால், ‘இப்பொழுதே போரினைச் செய்’ என்று நீ கூறுகின்ற இச்செயலை நான் செய்கிறேன் என்று சொல்லப் பண்ணினாற்போலவும், வருந்தித் தம்மை இசை

 

1. அடிபட்டுக் கிடத்தல் - சிலேடை : எல்லாராலும் அறியப்பட்டுக் கிடத்தல்;
  திருவடிகளில் பட்டுக் கிடத்தல்.

2. ‘பின்னையும் அகலப்புக’ என்றது, இத்திருவாய்மொழியில் ‘அடியேன் சிறிய
  ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை’ என்றதனை நோக்கி.

3. ஸ்ரீராமா. யுத். 18 : 3.

4. ஸ்ரீகீதை. 18 : 73.