முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
139

வர

வர்க்கு - ‘வெறுப்பு - இன்மை மாத்திரம் கொண்டு ‘அடியவர்’ என்னலாமோ?’ எனில், இங்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே ‘அடியவர்’ என்கிறார். 1‘உனக்கு நலிவு சிறிது வந்து இருப்பின், சீதையால்தான் எனக்கு என்ன பயன்?’ என்று, இன்று கிட்டிற்று ஒரு 2குரங்கை, என்றும் தன்னையே அடைந்திருக்கிற பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தான் அன்றோ! ஆதலால், இறைவனுக்கு அடியவர்களாய் அதிசயத்தைப் பண்ணுகிறவர்கள் ஒரு திருவடி, ஒரு திருவனந்தாழ்வான் அல்லர்; இங்கு, இவ்விலக்காமையினை யுடையவர்களேயாவர். ‘காரணம் என்னே?’ எனின், அவர்கள் உள்ள குணத்தை அனுபவித்திருப்பவர்கள், அத்தனையே யாம்; குணம் நிறம் பெறுவது இவர்கள் பக்கலில் அன்றே!

    எளியவன் - அவர்கள் பாவத்தைப் போக்குதல், புண்ணியத்தைக் கொடுத்தல், தன்னைக் கிட்டலாம்படி இருத்தல் செய்தல் அன்றிக்கே, அவர்கள் விரும்பியவாறு செய்துகொள்ளும்படி தன்னை ஆக்கி வைப்பவன். அதாவது, தன்னை ஒழிந்தது ஒன்றைக் கொடுத்தல், தான் இருக்குமிடத்தில் அவர்களை அழைத்துக் கொடுத்தல் செய்யான்; 3‘விஸ்வாமித்திர முனிவரே, உம்மைச் சேர்ந்து சரணம் அடைந்தவர்களாய் இருக்கிறோம் நாங்கள்; ஆணை இட்ட காரியங்களைச் செய்தோம்; இனி எந்தக் காரியங்களைச் செய்யவேண்டும்? விரும்பும் காரியத்தைக் கட்டளை இடுங்கள்,’ என்கிறபடியே, ‘நான் உங்கள் அடியான்; என்னை வேண்டினபடி ஏவிக் காரியங்கொள்ளுங்கள்,’ என்று நிற்பான் என்றபடி மற்றும், 4‘மேலான மோக்ஷத்தையுடையவன், பாவங்களை அழிக்கின்றவன், அழிவு அற்றவன், ஒளி உருவானவன், பிறப்பு இல்லாதவன், எங்கும் நிறைந்தவன்’ என்று இவை முதலாக இறைவனைப் பற்றி வீடுமன் முதலியோர் கூறிக்கொண்டிருத்தலைக் கேட்டு அறிவு மிக்கிருந்தான் ஆதலின், ‘நீ ஒருவன் பத்திக்கு எளியவன் ஆவது என்?’ என்று கேட்க, 5‘அருச்சுனா! வேறு ஒன்றால் அன்றிப் பத்தியினால் மட்டும் அடையும்படி இவ்விதமாக இருக்கிறேன். அதாவது, ‘ஒருவன்

 

1. ஸ்ரீராமா யுத். 41 : 4.
2. ‘குரங்கை’ என்றது, சுக்கிரீவனை.
3. ஸ்ரீராமா. பாலகா. 34 : 4.
4. ஸ்ரீகீதை. 10 : 12.
5. ஸ்ரீகீதை. 11 : 54.