முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
142

அத

அதிலே மணந்தான் ஒருவடிவு கொண்டாற்போலே இருப்பாளாய், நாட்டார் மணத்தை விரும்புவார்களாகில், 1அந்த மணமும் ‘தண்ணீர் தண்ணீர்’ என்னப் பிறந்தவன், அரும்பெறல் அடிகள் - பெறுதற்கு அரிய ஸ்வாமிகள். பெரிய பிராட்டியார் விரும்பும்படி இருக்கை போலே காணும் அறப்பெரிய இறைவனுக்கு இலக்கணம். 2‘ஜனகனுடைய குலத்தில் பிறந்த சீதை விரும்பும் கணவனாக எவன் இருக்கிறானோ, அவனுடைய திறல் வலி அளி முதலிய குணங்கள் அளவிட்டு அறிய முடியாதன,’ என்பது ஸ்ரீராமாயணம். நம் அரும்பெறல் அடிகள் - நாராயண அநுவாகாதிகளோடே சேர, அந்தப் பிரமாணப் பிரசித்தியைப் பற்ற, 3‘உளர் சுடர் மிகு சுருதியுள்’ என்றார் முன்னர்; அந்தச் சுருதியுள் ‘உனக்கு பூதேவியும் ஸ்ரீதேவியும் என மனைவியர் இருவர்’ எனக் கூறப்பட்டுள்ளது அன்றே? அங்குக்கூறிய அந்த இலட்சுமி சம்பந்தத்தைத் தாம் அங்கீகரித்தமை தோன்ற, ‘மலர் மகள் விரும்பும் நம் அடிகள்’ என்கிறார் இங்கு.

    இனி, மேலே கூறிய எளிமையை விளக்குகிறார்: மத்துறு. . . எத்திறம் மந்தரத்தைப் பிடுங்கி, கடலில் நடுநெஞ்சிலே நட்டு, நெருக்கிக் கடைந்து, வெளிகொடு வெளியே தேவர்களுக்கு அமுதைக் கொடுத்துவிட்ட பெருந்தோள்களையுடையவன் அன்றோ இப்போது ஆயர் சேரியிலே வந்து பிறந்து, வெண்ணெய் களவு காணப் புக்கு, கட்டுண்டு அடியுண்டு நிற்கிறான் என்கிறார்.

    மத்துறு கடை வெண்ணெய் - தயிர்ச்செறிவாலே மத்தாலே நெருக்கிக் கடையப்பட்ட வெண்ணெய். கடைவெண்ணெய் என்பது, முக்கால வினைத்தொகை. ‘முக்காலத்திலும் வெண்ணெய் கடைதல் உண்டோ?’ எனின், 4‘முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெய்’ என வருதலால் உண்டு என்க. முக்கால வினைத்தொகையாயினும், நிகழ்காலத்தில் பொருள் சிறப்புடைத்து; கடையாநிற்கையில், பசியராய் இருக்குமவர்கள் சோறு சமையப் பற்றாமல் 5‘வெந்தது கொத்தையாக வாயில் இடுமாறு போன்று, கடை

 

1. அந்த மணமும்-அந்தத் திருமகளும், ‘தண்ணீர் தண்ணீர் என்னப்
  பிறந்தவன்’ என்பது, ‘விரும்பும்’ என்ற சொல்லின் பொருள்.

2. ஸ்ரீராமா. ஆரண். 37 : 108.

3. திருவாய். 1. 1 : 7.

4. பெரியாழ்வார் திருமொழி, 3. 1 : 5.

5. வெந்தது கொத்தையாக-வெந்ததும் வேகாததுமாக; கொத்தை வேகாதது.