முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
152

இவற

இவற்றுக்கு அபிமாணியாய் இருக்கும்படியை அருளிச்செய்கிறார் என்று பொருள் கோடலுமாம்.

(3)

 26

        யாரும்ஓர் நிலைமையன் என அநி வரியஎம் பெருமான்
        யாரும்ஓர் நிலைமையன் என அறி வெளியஎம் பெருமான்
        பேரும்ஓர் ஆயிரம் பிறபல உடையஎம் பெருமான்
        பேருமோர் உருவமும் உளதுஇல்லை இலதுஇல்லை பிணக்கே.


    பொ-ரை :
ஆயிரம் திருப்பெயர்களையும் அப்பெயர்கட்கு அமைந்த ஆயிரம் திருமேனிகளையும் உடைய எம்பெருமான், (தன் முயற்சியால் காணவேண்டுமென்று இருப்பவர்கள்) எத்தகைய உயர்ச்சி பெற்றவர்களாயினும், அவர்கட்கு ஒருபடியையுடையன் என்று அறிதற்கு அரிய எம்பெருமான் ஆவன்; (அவன் திருவருளால் காணவேண்டுமென்று இருப்பவர்கள்) மிகத் தாழ்ச்சி பெற்றலர்களாயினும், அவர்கட்கு அறிதற்கு எளிய எம்பெருமான் ஆவன்; ஆதலால், ஒரு பெயரும் ஓர் உருவமுங்கூட உள்ளது இல்லை அடியர் அல்லாதார்கட்கு; ஒரு பெயரும் ஓர் உருவமும் இல்லது இல்லை அடியார்கட்கு; இவ்வகையில் என்றும் மாறுபாடே என்றவாறு.

    வி-கு : ‘யாரும்’-உம்மை உயர்வு சிறப்பு இரண்டாவது ‘யாரும்’ என்பதில், உம்மை இழிவு சிறப்பு. ஆயிரம் என்பது மிகப்பல என்பதனைக் குறித்தபடி. ‘தனக்கோர் வடிவும் பெயரும் இன்றி அன்பராயினார் கருதிய வடிவே வடிவாகவும், அவரிட்ட பெயரே பெயராகவும் உடையனாதலின், ‘முக்கை முனிவ’ என்பது முதலாக ‘நூறாயிரங்கையாற்றி கடவுள்’ என்பது ஈறாக வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும் சொல்லப்பட்டன’ என்ற பரிமேலழகருரை ஈண்டு நினைத்தல் தகும் (பரிபா. 3.) இலது இல்லை என்பது, உண்டு என்ற பொருளைக் காட்டும்; இரண்டு எதிர்மறை ஓர் உடன்பாட்டைக் காட்டும் என்பது வழக்கு.

    ஈடு :
நாலாம்பாட்டு. ‘தானாம் அமைவுடை நாரணன்’ உடைய அவதாரத்தின் எளிமை ஒருவர்க்கும் அறிய நிலம் அன்றோ? என்னில், ‘அடியார்க்கு மிக எளியனாய், அடியர் அல்லாதார்க்கு மிக அரியனாய் இருக்கும்,’ என்கிறார்.

    யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான் எத்துணை வியக்கத்தக்க ஞானத்தினையுடையவர்களேயாகிலும் தன்