முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
156

உண

உண்மைப் பொருளேயாம் என்க. அம் பகவன் - 1ஞானம், சத்தி, செல்வம் முதலியவைகளால் சிறிது மேன்மையுடையவர்களையும் பகவான் என்ற பெயரால் கூறும் வழக்கு உண்டாதலின், ‘பகவான் என்னும் பெயர் முக்கியமாக வசிப்பது இவன் பக்கலிலே: அல்லாதார் பக்கல் ஒளபசாரிகம்’ என்பார், ‘அம் பகவன்’ என்கிறார்.

    வணக்குடைத் தவநெறி வழி நின்று-வனக்கத்தையுடைய பத்திமார்க்கமாகிற வழியிலே நின்று; பகவத்கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில் 2‘பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள்,’ என்று கூறி, பின்னர், 3‘என்னை வணங்குதலைச் செய்வாய்,’ என்றும் கூறுவதால், இவரும் பத்தியை ‘வணக்குடைத் தவநெறி’ என்கிறார். பத்தியானது 4காதலியோடு கலக்கும் கலவி போன்று இன்பமயமாக இருக்குமாதலின் ‘அம் பகவன் தவநெறி’ என்கிறார். பத்தி, ஞானத்தின் விசேடமாகையாலே, ‘தவம்’ என்ற சொல்லால் அதனைச் சொல்லுகிறார்; 5‘அவனுக்குத் தவமானது ஞானத்தின் மயமாய் இருக்கிறது,’ என்கிற நியாயத்தாலேயாதல், இவனுடைய அன்பினையே தவமாக நினைக்கின்ற பகவானுடைய அபிப்பிராயத்தாலேயாதல். புறம் நெறி களை கட்டு - புறநெறியாகிற களையைக் கடிந்து. அதாவது, பறித்து. 6‘பத்தி விஷயமான போது வேறு பலன்களிற்செல்லும் விலக்கடிகளைத் தள்ளி’ என்றும், ‘பிரபத்தி விஷயமானபோது மற்றைச் சாதனங்களைத் தள்ளி’ என்றும் பொருள் கொள்க. உணக்குமின் பசை அற - 7‘ருசி வாசனைகளும் நீங்குகின்றன,’

 

1. பகவன் - பகம் என்ற சொல்லாற்குறிக்கப்படும் ஞானம், சத்தி, செல்வம்,
  வீரியம், புகழ், தேஜசு என்னும் ஆறு குணங்களையுமுடையவன்.
  உருத்திரபகவான், வசிஷ்டபகவான், வியாசபகவான் முதலிய பெயர்
  வழக்குகளைக் காண்க. ஒளபசாரிகம் - உபசாரம்.

2. ஸ்ரீகீதை, 9 : 14.

3. ஸ்ரீகீதை, 9 : 34. 

4. பகவான் என்பதற்கு ஆறு குணங்களையுடையவன் என்பது பொருளாதலின்,
  குணங்களையுடையான் பக்கல் செலுத்தம் பத்தி இன்பமயமாக
  இருக்குமாதலின், ‘காதலியோடு கலக்கும் கலவி போன்று இன்பமயமாக
  இருக்கும்’ என அருளிச்செய்கிறார்.

5. முண்டகோபநிடதம் 1. 1 : 10.

6. இங்கு இவ்வாறு அருளிச்செய்வதால், மேல் ‘தவநெறி’ என்பதற்குப் பத்தி
  மார்க்கம், பிரபத்தி மார்க்கம் என்னும் இரண்டனையும் பொருளாகக் கொள்க.

7. ஸ்ரீகீதை, 2 : 59.