முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
158

என

என்னும் வினையுடன் முடிக்க, படும் என்பதனைத் தெளிவு பற்றி பட்டது’ என இறந்த காலத்தாற்கூறினார்.

        ‘வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
        இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
        இயற்கையும் தெளிவும் கிளக்குங் காலை’

என்பது விதி.

(தொல். சொல். 245)

    ஈடு : ஆறாம் பாட்டு. ‘அவதாரங்களை வணங்குங்கோள் என்று கூறுகின்றீர்; 1‘‘பிரமனுக்கும் சிவனுக்கும் மத்தியில் முதல் அவதாரம்’ என்கிறபடியே, பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தோன்றி நிற்கும் நிலையாய் இருந்தது முதல் அவதாரம்; அவர்கள் மூவரும் ஒத்த காரியத்தில் அதிகரித்து நின்றார்கள்; இப்படி நிற்கையாலே, மூவரும் முதல்வரோ? மூவரில் ஒருவன் முதல்வனோ? மூவர்க்கும் அப்பால் ஒருவன் முதல்வனோ?’ என்று எங்களால் பகுத்து அறியப் போகாமையால் பற்றுவதற்கு அருமையாக இருக்கின்றது; ஆதலால், நாங்கள் பற்றுவதற்குப் பற்றக் கூடிய பொருளை நிரூபித்துத் தரலாகாதோ?’ என்ன, 2‘காண்கிற சரீரமே ஆத்துமா என்னும் நிலை தவிர்ந்து, சரீரத்திற்கு வேறுபட்ட ஆன்மா ஒன்று உண்டு என்று அறிதல்தானே அரிது? வருந்தி அதனை அறிந்தானேயாகிலும், பிரமன் சிவன் முதலியோரைச் சரீரமாகக்கொண்டு தான் ஆத்துமாவாய் நிற்கிற சர்வேஸ்வரன் நிலையினை அறிதல் முடியாது; ஆன பின்னர், இவ்வழியே இழிந்து பற்றப்பாருங்கள்,’ என்று, பற்றப்படும் பொருள் இன்னது என்றும், பற்றுமுறை இன்னது என்றும் அருளிச் செய்கிறார்.

    உணர்ந்து உணர்ந்து-உணர்வு என்னாமல் ‘உணர்ந்து’ என்கையாலே. ‘அறிவு மாத்திரமே உள்ளது; அறிகின்றவன் இலன்’ என்கிற யோகாசாரனை மறுக்கிறார். ‘உணர்ந்து உணர்ந்து’ என்ற

 

1. ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், 2 : 8.

2. பாசுரத்தில் ‘உணர்ந்துணர்ந்துணரிலும்’ என்பது முடிய உள்ளனவற்றை
  நோக்கிக் ‘காண்கிற சரீரமே’ என்று தொடங்கும் வாக்கியத்தை
  அருளிச்செய்கிறார். ‘இறைநிலை உணர்வரிது’ என்றதனை நோக்கி, ‘பிரமன்
  சிவன்’ என்று தொடங்கும் வாக்கியம் எழுகின்றது. ‘அரி அயன் அரன்
  என்னுமிவரை உணர்ந்துணர்ந்து உரைத்துரைத்து’ என்பதனை நோக்கி,
  ‘இவ்வழியே இழிந்து பற்றப் பாருங்கள்’ என்கிறார். ‘மனப்பட்டதொன்றே’
  என்றதனை நோக்கி, ‘பற்றப்படும் பொருள் இன்னது என்றும்’ என்கிறார்.
  ‘உணர்ந்துணர்ந்து உரைத்துரைத்து’ என்றதனை நோக்கிப் ‘பற்றும் முறை
  இன்னது என்றும்’ என்கிறார்.