முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
168

புலப

        புலப்படப் பின்னும்தன் உலகத்தில்
            அகத்தனன் தானே
        சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள
            இவைஅவன் துயக்கே.


    பொ-ரை :
எழுச்சியினையுடைய பிரமன், படைத்த நல்லுலகங்களோடு தானும் உந்தித்தாமரையில் இடம்பெற்றிருக்க, முப்புரங்களையும் எரித்த சிவபெருமான் வலப்பாகத்தில் இருக்கின்றான்; (தன்னைக் காண வேண்டும் என்று விரும்பும் அடியார்கள்) காணுமாறு தன்னுடைய உலகத்தில் தானாகவே வந்து அவதரிக்கின்றான்; இவனுடைய குணங்களைக் கூறப்புகுந்தால், மேலும் உள்ளே உள்ளேயாம்; (சொல்லி முடியா என்றபடி.) இவை எல்லாம் அவ்விறைவன் உங்களை மயங்கச் செய்யும்படி.

    வி-கு :
‘நீனிற உருவின் நெடியோன் கொப்பூம், நான்முக ஒருவற் பயந்த பல்இதழ்த், தாமரை’ (பெரும்பாண்.) ‘பெரியவனை’ மாயவனைப் பேருலகம் எல்லாம், விரிகமல உந்தியுடை விண்ணவனை’ (சிலப்.  ஆய்ச்) என்பனவற்றை முதல் இரண்டு அடிகளோடும், ‘பிற வாப் பிறப்பிலை, பிறப்பித்தோ ரிலையே’ (பரிபா. 3 : 72.) என்பதனைத் ‘தானே’ என்பதனோடும் ஒப்பு நோக்கல் தகும்.

    ஈடு :
ஒன்பதாம் பாட்டு. மேல், ஆறு, ஏழாம் பாசுரங்களால் பிரமன் சிவன் இவர்களுடைய தலைமை இன்மையினையும், இறைவனுடைய தலைமையினையும் அருளிச்செய்தார்: இப்பாசுரத்தில் அவர்கள் இருவரும் இறைவனைப்பற்றிச் சொரூபத்தை அடைந்தவர்களாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார். ‘ஆயின், பிரமன் முதலியோர்கட்கும் காரணனாய் அவர்களுக்கு இரட்சகனான சர்வேஸ்வரன், அவர்களும் காலிட மாட்டாத பூமியிலே வந்து அவதரிக்கைக்குக் காரணம் யாது?’ எனின், 1பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காகவும், ருசியைத் தோற்றுவிப்பவன் ஆகைக்காகவும்

 

1. ஸ்ரீ கீதை. 4 : 8. ‘பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காக’ என்றது,
  ‘நல்லார்கள் தம்மை நலம் புரிந்து காத்தல்’ என்றதன் பொருள். ‘ருசியைத்
  தோற்றுவிப்பவன் ஆகைக்காக’ என்றது, ‘எல்லாம் முந்தை அறம் நாட்டம்
  உய்த்தற்கு’ என்றதன் பொருள். ‘ஆயின், ‘பொல்லாரைப் போக்கல்’ என்றது
  என்னை?’ எனின், ‘பொல்லாரைப்போன்று நெறி போக்கல் அதனுடைய
  பலமாய் வருமதுவே’ என்ற வாக்கியத்தால் அது அமுக்கியம் என்கிறார்.
  அது, சங்கற்பமாத்திரத்தாலே செய்யலாம் ஆகையாலே, பிரதானம் அன்று
  என்றபடி. விரைவும் ருசியும் நேரிற் கண்டால் அல்லது உண்டாகா; ஆதலால்,
  அவற்றிற்கே பிராதாந்யம்.