முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
171

பிறப்பது கர்மத்தாலயோ?’ எனின், தானே - 1‘என்னுடைய இச்சையே’ என்கிறபடியே, ஒரு கர்மத்தால் அன்று; இச்சையேயாம்.

    சொலப்புகில் இவை பின்னும் வயிற்று உள-அவன் இப்படி அவதரித்துச் செய்யும் காத்தல்களில் ஒரு சிறிது சொல்லில் சொல்லும் அத்தனை; எல்லாம் சொல்லித் தலைக்கட்டப் போகாது: சொலப்புகில் உள்ளே உள்ளேயாம் இத்தனை. இனி, இதற்குத் தன்னாலே படைக்கப் பட்டவர்களாக உள்ளவர்கட்கு ‘என் மகன்’ என்று விரும்பும் படியாக வந்து பிறந்து ‘உனக்கு அரசைத் தந்தேன்; அதுதன்னை வாங்கினேன்; போ,’ என்றும், கையிலே கோலைக்கொடுத்துப் ‘பசுக்களின் பின்னே போ,’ என்றும் சொல்லலாம்படி எளியனாய் இருக்கிற தான், இவர்களுக்கு ஓர் ஆபத்து வந்தால் இவர்களை வயிற்றிலே வைத்து நோக்கும் படியை அருளிச்செய்கிறார் என்று கூறலும் ஆம். ‘நன்று; இப்படி இதுவே பொருள் என்பது நீர் அருளிச்செய்யும் போது தெரிகின்றது; அல்லாத போது தெரியாதபடி இராநின்றதே!’ என்ன, இவை அவன் துயக்கே-2 ‘என்னுடைய மாயையினை ஒருவராலும் தாண்ட முடியாது,’ என்கிறபடியே, அவன் தானே மாயையாகிற விலங்கை இட்ட புண்ணியம் இல்லாதவர்கள் தன்பக்கல் அணுகாதபடி செய்து, அவர்கள் அகலப்புக்கால் அவன்தான் அனுமதி கொடுத்து, உதாசீனனாய் இருக்கையாலே தெரியாது ஒழிகிறது என்கிறார். துயக்கு-ஐயம்.

(9) 

(32)

        துயக்கறு மதியில்நன் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
        மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
        புயற்கரு நிறத்தனன் பெருநிலங் கடந்தநல் அடிப்போது
        அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே.

    பொ-ரை :
ஐயம் திரிபுகளாகிய மயக்கம் அற்ற மனத்திலே தோன்றுகிற சிறந்த ஞானத்தையுடைய மேலான தேவர்களையும் மயங்கச் செய்கின்ற குணங்களையும் செயல்களையுமுடைய அவதாரங்கள், ஆகாயத்தைக்காட்டிலும் பெரியனவாக எடுக்க வல்லவனாய், மேகம் போன்ற கரிய நிறத்தையுடையவனாய் இருக்கின்ற இறைவ

 

1. ஸ்ரீ கீதை.
2. ஸ்ரீ கீதை. 7 : 14.