முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
331

இது. அதாவது, 1‘ஒருவர்க்கும் தலை வணங்கேன் என்று இருந்த என்னைத் தனக்கே உரிமையாக்கினான்’ என்றபடி. கடல் மலிமாயப் பெருமான் - திருப்பாற்கடலிலே குறைவு அற வந்து வசிக்கின்றவனாய், ஆச்சரியமான செயல்களையுடைய சர்வேஸ்வரன். இனி, இதற்குக் ‘கடலைக்காட்டிலும் மிக்க ஆச்சரியத்தையுடைய சர்வேஸ்வரன்’ என்று பொருள் கூறலும் ஆம். கண்ணன் - அந்த ஆச்சரியங்கள் எல்லாம் தன் பக்கலிலே காணலாம்படி இருக்கிற கிருஷ்ணன். என் ஒக்கலையானே - 2யசோதைப்பிராட்டி மருங்கிலே இருக்குமாறு போன்று என் மருங்கிலே இராநின்றான்.

(4)

93 

        ஒக்கலை வைத்து முலைப்பால்
            உண்என்று தந்திட வாங்கிச்
        செக்கஞ் செகஅன்று அவள்பால்
            உயிர்செக உண்ட பெருமான்
        நக்க பிரானோடு அயனும்
            இந்திர னும்முத லாக
        ஒக்கவும் தோன்றிய ஈசன்
            மாயன்என் நெஞ்சினு ளானே.

    பொ-ரை :
பூதனையானவள் ஸ்ரீகிருஷ்ணனைத் தன் இடையிலே வைத்துக்கொண்டு, முலையினின்றும் வருகின்ற பாலை உண்ணுவாய் என்று கொடுக்க, அதனை வாங்கித் தன்னைக் கொல்ல வேண்டும் என்று நினைத்து வந்த அக்கொலை அவளோடே போகும்படி (அவள் இறக்க என்றபடி). அப்பொழுது அவள் முலைப்பாலின் வழியே உயிரும் போகுமாறு பாலைக்குடித்த பெருமையுடையவன்; சிவபெருமானோடு பிரமனையும் இந்திரனையும் மற்றும் எல்லாப் பொருள்களையும் ஒரே காலத்தில் உண்டாக்கிய தலைவன்; ஆச்சரியத்தையுடையவன் ஆன இறைவன் என் மனத்தில் தங்கியிருக்கிறான்.

    வி-கு : செக்கம் - மரணம், செகு என்பது முதனிலை. செக-கொல்ல. நக்கன் - வஸ்திரம் இல்லாதவன்; சிவன். அயன்-அஜன்-விஷ்ணுவிடம் தோன்றியவன். அ-விஷ்ணு. இந்திரன்-செல்வமுடையவன். ‘தந்

 

1. ஸ்ரீராமா. யுத். 36 : 11.

2. ‘கண்ணன்’ என்றதனை நோக்கி, ‘யசோதைப்பிராட்டி மருங்கிலே
  இருக்குமாறு போன்று’ என்று அருளிச்செய்கிறார்.