முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
175

    வி-கு : ‘தொழுது எழக் கடைந்தவன்’ என முடிக்க. ‘அம்சிறை’ என்பதில் ‘அம்’ பிறவியின் கொடுமையினை விளக்க வந்தது; ‘நல்ல ‘பாம்பு’ என்பது போன்று, ‘அம் கெடுவினை’ என்றார் முன்னும்.

    ஈடு : முடிவில், இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள். முற்பட நித்தியசூரிகள் வரிசையைப் பெற்று, பின்னை சம்சாரமாகிற 1அறவைச் சிறை வெட்டிவிடப் பெறுவர்கள் என்கிறார்.

    அமரர்கள் தொழுது எழ அலைகடல் கடைந்தவன் தன்னை கவிழ்ந்து ‘உப்புச்சாறு கிளருவது எப்போதோ?’ என்று கிடக்கிற தேவஜாதியானது எழுத்து வாங்கும்படியாக ஆயிற்று, தோளுந்தோள் மாலையுமாய் ஒரு கடல் ஒரு கடலை நின்று கடையுமாறு போன்று கடைந்தபடி. குணங்களுக்குத் தோற்றுத் 2‘தொழுது எழு’ என்கிற தம் பாசுரமேயாய்விட்டது அழகுக்குத் தோற்ற அவர்களுக்கும் ஆதலின், ‘அமரர்கள் தொழுது எழ’ என்கிறார். அமர் பொழில் - சேர்ந்த பொழில். வளங்குருகூர் - வளப்பத்தையுடைத்தான திருநகரி. சடகோபன் குற்றேவல்கள் - இத்திரு நகரிக்குத் தலைவரான ஆழ்வார் சொற்களைக்கொண்டு அடிமை செய்தபடியாயிற்று இவைதாம். ஆயின், சொல் அடிமை மாத்திரம் போதியதாமோ?’ எனின், எல்லாம் நிறைந்த இறைவன் விஷயத்தில் சொற்களைக் கொண்டு செய்யும் அடிமைக்கு மேற்படச் செய்யலாவன இல்லையே! 3‘அப்பரமபதத்தில் இருக்கிற நித்தியசூரிகளும் துதி செய்துகொண்டே யிருக்கின்றார்கள்’ என்கிறபடியே, நித்தியசூரிகளுக்கும் தொழில் இதுவே அன்றோ?

    அமர் சுவை ஆயிரம் - சுவை நிறைந்தனவாய் இருக்கிற ஆயிரம். ‘இதனால், சொற்களைக் கொண்டு செய்யும் அடிமை ‘முறை’ என்று காரிய புத்தியாகச் செய்யவேண்டா என்றபடி. அவற்றினுள் இவை பத்தும் - 5‘விண்ணவர் அமுது உண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட’ என்னுமாறு போன்று, அவ்வாயிரத்துள் இத்திருவாய்மொழி சுவை நிறைந்ததாயிருக்கும். வல்லார் அமரரோடு உயர்விற்சென்று தம் பிறவி அம் சிறை அறுவர்-

 

1. அறவைச் சிறை - தயநீ்யமான சிறை; துக்கமே உருவமான சிறை என்றுமாம்
  என்பர் அரும்பத உரைகாரர்

2. திருவாய். 1. 1 : 1.

3. இருக்கு வேதம்.

4. இதனால், சுவை நிறைந்தனவாய் இருப்பதால்.

5. பெரிய திருமொழி, 6. 1 : 2.