முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
184

New Page 1

துவண்டு தூது போகைக்கு யோக்கியமாம்படி இருக்கை,’ எனலுமாம். இனி, ‘நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்னும் மகளிர்க்குள்ள நான்கு குணங்களுள் ஒன்றான மடப்பத்தையே கூறுகிறாள் என்று கொண்டு, பிரிவில் துன்பத்தை அறியும் தன் இனமான பேடையைப் பார்த்துச் சொல்லுகிறாள்,’ என்றலும் ஒன்று. நாராய்-‘அம்மே!’ என்னுமாறு போன்று இவளும் ‘நாராய்’ என்கிறாள். அளியத்தாய்-அவன் போகட்டுப் போன சமயத்திலே ஆற்றாமை அறிவிக்கலாம்படி வந்து முகங்காட்டின உன் அருளின் தன்மை இருந்தபடி என்! அளி-அருள்; 1‘அருள் பண்ணத்தக்காய்’ என்றபடி. ‘இச்சமயத்தில் இவள் நாரையைப் பார்த்தது யாங்ஙனம் இருந்தது?’ எனின், பிராட்டியைப் பிரிந்த ஸ்ரீராமன், 2‘பம்பை நதிக்கரையில் அனுமானைச் சந்தித்தது போன்று இருந்தது’ என்பதாம். அச்சந்திப்பு வழி பறிப்பார் கையிலே அகப்பட்டு நிற்கத் தாய் முகத்திலே விழித்தாற்போன்று இருந்தது என்றபடி.

    நீயும்-3 ‘இளையபெருமாள், தன் தமையனுடைய இரண்டு திருவடிகளையும் இறுகப் பிடித்தவராய், பிராட்டியை முன்னாகக் கொண்டு பேசினார்,’ என்கிறபடியே, என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னிட்டுப் போலே காணும் காரியங்கொள்வது. நின் அம் சிறைய சேவலுமாய்-அது இட்ட வழக்கான நீயும் நீ இட்ட வழக்கான சேவலுமாகி. ‘திருமகள் கேள்வன்’ என்பது போன்று, சேவலிடத்துத் தான் அன்பு செலுத்துவதற்குக் காரணம் பேடையே என்பாள், ‘நின் சேவல்’ என்கிறாள். பெண்ணை அணைந்து பெற்ற அழகு வடிவிலே தோன்றுகின்றதாதலின், அதனை ‘அஞ்சிறை’ என்கிறாள், ஆஆ என்று-‘ஐயோ ஐயோ!’ என்று, இரண்டும் சேர்ந்திருப்பது தன் துன்பம் நீக்குகைக்கு என்று இருக்கிறாள் ஆதலின், ‘நீயும் நின் சேவலும்’ என்கிறாள். எனக்கு- 4‘முனிவர்கள் இராக்கதர்களால் துன்புறுத்தப்பட்ட தங்களுடைய

 

1. ‘எனக்கு அருள் செய்தற்குத் தகுதியான தன்மையினையுடையை’ என்பதாம்.

2. ஸ்ரீராமா. பால. 1 : 57

      வழி பறிப்பார் கையில் அகப்படுகையாவது-பிராட்டியினுடைய
  கண்ணிற்கும் முகத்திற்கும் போலியான நீலம் தாமரை முதலானவற்றால்
  நெஞ்சு பறியுண்கை.

3. ஸ்ரீராமா. அயோத். 31. 12.

4. ஸ்ரீராமா. ஆரண். 6 : 16.