முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
185

சர

சரீரங்களை ஸ்ரீராமபிரானுக்குக் காட்டியது’ போன்று, இவளும் ‘எனக்கு’ என்று, விரகம் தின்ற தன் வடிவைக் காட்டுகிறாள். இனி, ‘அவனோடே கலந்து பிரிந்து, ‘கண்ணாலே காணப்பெறுவது என்றுகாண்’ என்னும் விருப்பத்தோடே இருக்கிற எனக்கு,’ என்று பொருள் கூறலுமாம். அருளி - இரப்புக்குச் செய்தது ஆகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி. அருள் பண்ணுகைக்கு 1அத்தலை குறைவு அற்றாற்போலே அன்றோ அருளுக்கு விஷயமான இத்தலை குறைவு அற்றபடி? இறைவன் விஷயத்தில் உதவி செய்கின்றவர்கள் கைம்மாறு கருதியன்று உதவி செய்வது; தங்கள் பேரருளாலேயாம். ‘என்னை?’ எனின், 2உபய விபூதியாளனை அவர்கள் உபகரித்தால் அவனுக்கு ஒப்பாகக் கொடுக்கத் தக்க பொருள் இல்லையே இவனுக்கு? ஆதலால், ‘அருளி’ என்கிறாள்.

    இவள் நாரையைப் புகழ்ந்து கொண்டாடியது, 3“வானர உத்தமனே, நீ மிக்க பளமுடையவன்; நீ மிக்க ஆற்றல் வாய்ந்தவன்; நீ மிக்க அறிவு நிறைந்தவன்,” என்று பிராட்டி புகழ்ந்தது போன்று இருந்தது. கேட்ட நாரை, ‘எங்களை இங்ஙனம் கொண்டாகிறது என்? உன் நிலையைக் கண்டு போகட்டுப் போனவன் எங்கள் வார்த்தையைக் கேட்கப் போகின்றானோ? மேலும், 4“பிரகிருதி சம்பந்தம் இல்லாதவனாய்ப் பரம சாம்யத்தையடைகிறான்” என்கிறபடியே, பரமபதத்தில் இருப்பவர்கள் எல்லாவற்றாலும் இறைவனை ஒத்தவர்களாய் அன்றோ இருப்பார்கள்? நாங்கள் அவனுக்கும் அவர்களுக்கும் வேற்றுமை அறிவது யாங்ஙனம்?’ என்று அன்றோ நாங்கள் இருக்கிறோம் என்பது அவற்றுக்குக் கருத்தாகக் கொண்டு மேல்வார்த்தை சொல்லுகிறாள்: வெஞ்சிறைப்புள் உயர்த்தாற்கு - அவர்கள் எல்லாவற்றாலும் தன்னை ஒத்தவர்களாக இருக்கையாலே வேறுபாட்டினைக் காட்டும் அறிகுறியாகப் பெரிய திருவடியைக் கொடியிலே உடையவனாக இருப்பான். விரோதியைப் போக்கிக்கொண்டு வருகைக்கு நமக்கு அங்கே ஆள் உண்டு என்பாள், ‘வெஞ்சிறைப்புள்’ என்கிறாள். அன்றி, தன்னை

 

1. அத்தலை குறைவு அறுதல்-ஆணும் பெண்ணும் சேர்ந்திருத்தல். இத்தலை
  குறைவறுதல் - கைம்முதல் இல்லாமை, வேறு பற்றுக்கோடு இல்லாமைகளை
  உடைத்தாயிருத்தல்.

2. உபய விபூதியாளன்-இரண்டு உலகங்கட்குமுரியவன்.

3. ஸ்ரீராமா. சுந். 36 : 7.

4. முண்டக உபநிடதம். 3. 1 : 3.