முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
187

இரண

இரண்டு மடங்கு அதிகத் துன்பத்தைத் தான் அடைகின்றவன், சிறையில் வைப்பானோ? வையான்’ என்பாள் ‘வைக்கில்’ என்கிறாள். தலைமேற்கொள்ளுவான் என்பது குறிப்பு. வைப்பு உண்டால் என் செயுமோ-‘கிடைக்குமாகில் அது பொல்லாதோ? சிறை இருத்தல் துன்பத்தைத் தருவது ஒன்று அன்றோ?’ எனின், 1பிறருக்காகச் சிறை இருக்கை கிடைப்பது ஒன்றோ? ‘ஆயின், அவ்வாறு இருத்தல் தனக்கு உத்தேஸ்யமாமோ?’ எனின், இராவணன் தெய்வப் பெண்களைச் சிறையிட்டு வைக்க, தான் அவர்கள் காலில் விலங்கைத் தன் காலிலே கோத்துச் சிறை மீட்டவள் அன்றோ?

    இன, ‘என் விடுதூதாய்ச் சென்றக்கால் வன்சிறையில் அவன் வைக்கில்’ என்பதற்கு, நீங்கள் ஏதேனும் அவனுக்குத் தூது போகின்றீர்களோ? 2சிறை கட்டுதல், சிங்கவிளக்கெரித்தல் செய்யில் செய்வது என்?’ என்று கூசுகைக்கு; எனக்காகத் தூது போனாரை 3‘அனுமானுக்கு என்னாற்செய்யப்படும் இவ்வாலிங்கனமானது’ என்னுமாறு போன்று, மார்பிலே அணைக்கும் காணுங்கோள். நான் அணைய ஆசைப்படுகிற மார்பு அன்றோ உங்களுக்குப் பரிசிலாகக் கிடைக்கப் போகின்றது?’ என்ற தொனிப்பொருளும் தோன்றும்.

(1)

35

        என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய்
        என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள்! நீரலிரே
        முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
        முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?

 

1. விடுதலைப் போராட்டத்தில் மகாத்துமா காந்தியடிகள், பண்டித ஜவஹர்லால்
  நேரு முதலானோர் சிறையிருந்தமை இங்கு நினைவு கூர்க.

2. சிறை கட்டுதல் முதலியன, அனுமானுக்கு அரக்கர்களால் செய்யப்பட்டவை;
  சிறை கட்டுதல்-பிரமாஸ்திரத்தால் கட்டுதல், சிங்கலிளக்கு எரித்தல்-இங்கே
  காலிலே சீலையைக்கட்டி எரித்தல். உலகத்தில் சிம்ஹ ஆகாரப் பிரதிமை
  செய்து அதனைத் தலையிலே வைத்து எரித்தல் என்பது தொனிப்பொருள்;
  அவமதி பண்ணுகை என்பது கருத்து.

3. ஸ்ரீராமா. யுத்த. 1. : 13.