முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
191

New Page 1

தெற்காழ்வான் கோளரியாழ்வானுக்குத் தீர்த்தத்துறையிற் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது.

    திருவடிக்கீழ் குற்றேவல் - திருவடிகளிலே கிட்டி அந்தரங்கத் தொண்டுகளைச் செய்வதற்கு, ‘தலைவி பிரிந்து வருந்துகிறவள் ஆதலின், ‘அவனைச் சேர்வதற்கு’ என்னாது ‘திருவடிக்கீழ்க் குற்றேவல்’ என்கிறது என்னை?’ எனின், அந்தணர் பிச்சு ஏறினாலும் ஒத்துச் சொல்லுமாறு போன்று, இவர் பிராட்டியானாலும் மார்பால் அணைக்க நினையார்; திருவடிகளில் அணையத் தேடும் அத்தனை. முன் செய்ய முயலாதேன்-முற்பிறவிகளிலே நோலாத நான். இனி இதற்கு,’ 1‘இந்தக் காரியத்தைச் செய் என்று என்னை நியமிக்க வேண்டும்,’ என்று இளைய பெருமாள் கூறியது போன்று, ‘இன்னதைச் செய்’ என்று ஏவத் திருமுன்பே அடிமை செய்ய முயலாத நான் என்று பொருள் கூறலுமாம். முன் செய்ய முயலாதேன் இனம் அகல்வதுவோ விதி-திருவடிகளிலே அடிமை செய்கைக்குத் தக்கது ஒரு சாதனத்தை என தலையால் பண்ணாத நான் அகன்றே போம் இத்தனையோ? இனம்-‘இன்னம்’ என்பதன் விகாரம். விதி-நியாயம். 2‘எங்கள் அபிமதம் பெறுகைக்கு எங்கள் பக்கல் ஒரு நன்மை இல்லாத பின்பும் தாழ்க்கும் இத்தனையோ?’ என்கிறாள் என்று பிள்ளை திருநறையூர் அரையர் பணிப்பர். இனி, ‘அகல்வதுவோ விதியினமே? என்பதனை, ‘விதியினம் அகல்வதுவோ?’ என்று மாறிக் கூட்டி, 3முதல் இல்லாதார் அன்றோ பலிசை இழப்பார்! அவன் தானே முதலாக இருக்கும் கூட்டமன்றோ இவர்கள் கூட்டம்?’ என்று பொருள் கூறலுமாம்; விதியினம் புண்ணியத்தையுடையோம். 4‘களைகண்மற்றுஇலேன்’ என்றும், 5‘உன் சரண் அல்லால் சரண் இல்லை’ என்றும், 6மைத்து எழுந்த மாமுகிலே பார்த்திருக்கு மற்றவை’ என்றும்,

 

1. ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.

2. எங்கள் அபிமதம்.எங்கள் விருப்பம்; விரும்பப்படும் பொருள்.

3. முதலில்லாதார் பலிசையிழத்தல் - பணம் இல்லாதவர்கள் தொழிலை
  இழத்தல். பலிசை-இலாபமுமாம்.

4. திருவாய். 5. 8 : 8.

5. பெருமாள் திருமொழி. 5 : 1.

6. பெருமாள் திருமொழி. 5 : 7.