முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
282

என

என்றார் மேலும். ‘அற ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால், பிற ஆழி நீந்தல் அரிது’ என்ற திருக்குறளின் ‘அற ஆழி அந்தணன்’ என்ற சொற்றொடர்க்குப் பொருள் கூறுவார் போன்று ‘அறவனை அழிப்படை அந்தணனை’ என்று அருளிச்செய்கிறார்.

    இத்திருப்பதிகம், நாற்சீர் நாலடியான் வருதலின், கலிவிருத்தம் எனப்படும்.

    ஈடு : முதற்பாட்டு. 1‘இப்படி எல்லை இல்லாத இனியனான இறைவனை விட்டு, வேறு பயன்களைக்கொண்டு அகலுவதே!’ என்று கேவலரை நிந்திக்கிறார்.

    பிறவித்துயர் அற ஞானத்துள் நின்று - 2இது, ‘பிறப்பு இறப்பு இவற்றினின்று விடுபடும்பொருட்டு என்னை அடைந்து,’ என்கிறபடியே, இருக்கிற கேவலரைச் சொல்லுகிறது. ‘ஆயின், கேவலன் தான் நினைத்த சிறிய பயனைப் பெறுதற்கு இறைவனை அடைதல் வேண்டுமோ?’ எனின், 3ஐஸ்வர்யார்த்திக்கும், ஆத்ம பிராப்தி காமனுக்கும், பகவத்பிராப்தி காமனுக்கும் இறைவனை வழிபடுதலும், உடலை விட்டு உயிர் நீங்குகிற காலத்தில் இறைவனை நினையும் நினைவும் வேண்டும். ‘அங்ஙனம் ஆயின், பேற்றில் ஏற்றத் தாழ்வுகள் உண்டாகிறபடி என்னை?’ எனின், வழிபடுகிற காலத்தில் சிறுகக் கோலுகையாலே; அதாவது, இறைவன் அளவும் செல்லாது நடுவே வரம்பு இட்டுக் கொள்கையாலே, இவ்வரம்பினையே, 4‘வரம்பு ஒழி

 

1. ‘ஆழிப்படையந்தணனை மனத்துவைப்பாரே’ என்றதனை நோக்கி
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘ஜரா மரண மோக்ஷாய’ என்கிற கீதா சுலோகத்தின் பொருளை,
  இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார் என்று திருவுள்ளம்பற்றி
  இப்பாசுரத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார். ‘எங்ஙனம்?’ எனின்,
  ‘பிறவித் துயரற’ என்றது, ‘ஜரா மரண மோக்ஷாய க்ருத்ஸ்ந மத்யாத்மம்
  கர்மசாகிலம்’ என்றதன் பொருள். ‘ஞானத்துள் நின்று துறவிச் சுடர்
  விளக்கம் தலைப்பெய்வார்’ என்றது, ‘தே ப்ரஹ்ம தத் விது:’ என்றதன்
  பொருள். ஆழிப்படை அந்தணனை மனத்து வைப்பாரே’ என்றது,
  ‘மாமாஸ்ரித்ய’ என்றதன் பொருள். (ஸ்ரீ கீதை.   7 : 29.) இப்படி, அந்தச்
  சுலோகத்தின் பொருளும், இப்பாசுரமும் ஒத்து இருக்கையாலே,
  அச்சுலோகத்தை எடுத்து மேற்கோள் காட்டி அவர்களைச் சொல்லுகிறது
  என்கிறார்.

3. ஐஸ்வர்யார்த்தி-செல்வத்தை விரும்புகின்றவன். ஆத்ம பிராப்தி காமன் -
  கேவலன். பகவத் பிராப்தி காமன் - இறைவன் திருவடிகளில் தொண்டு செய்ய
  விரும்பும் அடியவன்.

4. திருப்பல்லாண்டு, 4.