முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
194

New Page 1

‘இவ்வன்ன நடை கொண்டோ என் காரியம் செய்யப்போகிறது!’ என்பதாம். இனி, இளையபெருமாளுடைய வில்லின் நாண் ஒலி செவிப்பட்ட பின்னர், மது அருந்தியதால் உண்டான கலக்கமும் தெளிந்து, கழுத்தில் மாலையையும் அறுத்துப் போகட்டு, ‘இச்சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது’ என்று தாரையைப் புறப்பட விட, அவள், 1கலவியால் உண்டான பரவசத் தன்மையடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாற்போன்று இராநின்றது இவற்றின் நடையழகும் என்பாள், பெடை மணக்கும், மென்னடைய அன்னங்காள்’ என்கிறாள் எனினும், அமையும். ‘ஆயின், பட்டத்துத்தேவியை முன்னிடலாமோ?’ எனின், 2இளையபெருமாளுடைய திருவுள்ளத்தில் சிவிட்குத் தாரையையிட்டு ஆற்றவேண்டிற்றுக்காணும் இருந்தது.

    மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு ‘இராவணனைப்போலே தலை அறுத்துவிட ஒண்ணாதபடி கொடை என்ற ஒரு குணத்தை ஏறிட்டுக்கொண்டிருந்தான் மாவலி. இந்திரன் அரசையிழந்து நின்றான்; இரண்டிற்கும் மாறு இல்லாமல் செய்யலாவது என்?’ என்று, 3‘ஆயிரம் பசுக்களைக் கொடுத்த கைகள்’ என்கிறபடியே, கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு நீர் ஏற்று அவனுக்குக் கொடுத்த விரகர்க்கு. இதனால், தலைவர் 4கால தூர தர்சி என்பதனைத் தெரிவிக்கிறாள். கோடியைக் காணியாக்கினாற்போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி சிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள். ‘உண்டு’ என்று இட்டபோதொடு

 

1. ஸா-ஒரு கலவியும் பிரிவும் வேண்டாதபடியான நடையழகையுடையவள்.
  ப்ரஸ்க்கலந்தீ-புணர்ச்சியாலுண்டான துவட்சியால் தடுமாறி, அடிமேல்
  அடியாக இட்டுவந்தாள். மதவிஹ்வலாக்ஷீ-மது பானம் முதலிய வைகளாலே
  தழுதழுத்த நோக்கையுடைவளாய் இருந்தாள். ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம
  சூத்ரா-அரை தூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையிற்கிடந்தபடியே
  பேணாதே வந்தாள். ஸலக்ஷணா - புணர்ச்சிக்குறிகள் காணலாம்படி வந்தாள்.
  லக்ஷ்மண சந்நிதாநம் ஐகாம-தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு
  வந்தாள். தாரா - தாரையானவள். நமிதாங்கயஷ்டி: உருகு பதத்தில்
  வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதாப் போல இத்துவட்சி நிரூபகம் இவளுக்கு
  என்று தோற்றும்படி இருந்தாள். ஸ்ரீராமா. கிஷ். 33 : 37. அப்படிப்பட்ட
  நடையழகாலே அவரைத் துவக்கிக் காரியங்கொள்ளவற்று இவையும் என்று
  இருக்கிறாள்.

2. இவ்வாக்கியம் ரசோக்தி. தாரை-சிலேடை.

3. ஸ்ரீராமா. யுத். 21 : 77.

4. சாலதூரதர்சி-மிக்க தூரத்திலுள்ளவற்றை எல்லாம் அறிகிறவர்.