முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
205

    வி-கு : ‘அருளி’ என்பதனைக் ‘கடவீர்’ என்பதுடன் முடிக்க. கண்டக்கால்-வினையெச்சம். யாம் என்பது, தனித்தன்மைப் பன்மை. உம்மை-எச்ச உம்மை. ‘வண்டு’ தும்பியின் இனத்தைச் சார்ந்தது; நன்மணத்தேமட்டும் செல்லும் இயல்பினது என்பர் நச்சினார்க்கினியர். (சிந்தாமணி 893. செய். உரை.)

    ஈடு : ஆறாம் பாட்டு. ‘எங்கள் ஆற்றாமை நீக்கிலராயினும், தம்முடைய நாராயணன் என்ற பெயர் குறைந்து போகாதபடி, நோக்கிக்கொள்ளச் சொல்லுங்கள்,’ என்றாள் முன், ‘தாம் அல்லாதாருடன் கலந்து வரும் தாழ்வினைக்காட்டிலும் நம்முடைய நாராயணன் என்ற பெயர் அழியினும் அமையும்’ என்பதனை இறைவன் திருவுள்ளமாகக் கொண்டு, மேல் செய்யத் தக்க செயலைக் கூறுகிறாள் இப்பாசுரத்தில். அதாவது, தமக்கும் தாழ்வு வாராமல் எங்கள் சத்தையும் கிடக்கைக்கு ஒருவழி உண்டு. தாம் 1அழகு செண்டு ஏறப் புறப்படுதல், யானைக்கு அருள் செய்யப் புறப்படுதல் செய்வன போல்வன சில உளவே அன்றே? அப்போது எங்கள் தெருவே போனால் தமக்கும் ஒரு தாழ்வு வாராது; நாங்களும் சாளரத்தின் வழியால் கண்டு பிழைத்துக் கிடப்போம்; இப்படி மாறுபாடு இல்லாதனவாகச் செய்யலான பின்பு, அதனைச் செய்யச் சொல்,’ என்று ஒரு வண்டை இரக்கிறாள்.

    அருளாத நீர்-2‘என்னை வணங்குகின்றவனை நான் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு,’ என்று திருவருள் புரிவதற்குச் சங்கற்பித்திருக்குமாறு போன்று, அருளாமைக்குச் சங்கற்பித்திருக்கிற நீர். 3‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர், ‘அருளாத நீர்’ என்கிறது என்ன நிலை விசேடம் என்று அறிகிலோம்; ‘அருளாத நீர்’ என்று ஒரு திருப்பெயர் சாற்றுகிறாள். இனி, ‘அருளாத நீர் அருளி’ என்பதற்கு, ‘திருவருள் செய்வதற்குப் பரிபக்குவமுள்ள உயிர்கள் கிடைக்காமை

 

1. அழகு செண்டேறப் புறப்படுகை-அழகு காட்டப் புறப்படுதல் அதாவது, தான்
  அலங்கரித்துக்கொண்டு புறப்பட்டால், அந்த அழகு அடியார்கள் நெஞ்சிலே
  படும்படி புறப்படுகை. அன்றி, விளையாட்டுச் சாரிகை புறப்படுகையுமாம்.

2. ஸ்ரீராமா. யுத்த. 18 : 33.

3. வியாக்கியாதாவின் ஈடுபாடு-‘மயர்வற’ என்று தொடங்கும் வாக்கியம்.
  திருவாய். 1. 1 : 1.