முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
210

யால் அன்றோ என்று இன்னாதாகிறாள்,’ என்று 1திருக்குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர். ‘ஆயின், பிராட்டியின்மேல் வெறுப்பாக, பிள்ளான் இங்ஙனம் பணித்தல் தகுமோ?’ எனின், உறவு உள்ள இடத்திலேயன்றோ வெறுப்பும் உண்டாகும்? ஆதலால் தகும்.

    என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு - ‘தத்தம் குற்றம் பாராமல் அருளச் சொல்லும் இத்தனையோ வேண்டுவது?’ என்று சொல்ல நினைந்தாராகில், ‘சுவாமியினுடைய திருவருளுக்கு என்ன குற்றத்தைச் செய்தாள்?’ என்று நீங்கள் சொல்லுங்கள். இனி, இதற்கு, என் குற்றத்தைப் பார்த்துத் 2தமிக்க நினைந்தாராகில், தம் பொறையாகிற நேர்தரவைக் காட்டுங்கள் என்னுதல். அதாவது, ‘சுவாமியான தம் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றஞ்செய்யப் போமோ?’ என்று சொல்லுங்கள் என்றபடி. ‘ஏன் செய்யப் போகாதோ?’ என்னில், 3ஆஸ்ரயத்துக்குத் தக்கபடி அன்றோ எல்லாம்? நாங்கள் குற்றம் செய்வதும் எங்கள் அளவிலே; தாம் பொறுப்பதும் தம் அளவிலேயன்றோ? ஆதலால், செய்யப் போகாது. இனி, இதற்கு ‘தேவரீர் திருவருளுக்குத் 4தண்ணீர் துரும்பாக வலம் வருதல், வணங்குதல் முதலியன எவையேனும் செய்தன உளவோ?’ என்று கூறலுமாம். 5‘பிறருடைய குற்றத்தைப் பொறுத்திருத்தலாகிய பெரிய தர்மமானது தேவரீரிடமிருந்தே என்னால் கேட்கப்பட்டது,’ என்று சொல்லும்படி இருக்கும் நிலைக்கு என் பிழைத்தாள் என்பாள், ‘திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள்’ என்கிறாள். 6‘கோபத்திற்குக் காரணம் யாது?’ என்கிறாள் தாரை; அதாவது,

 

1. ‘திருமாலார்’ என்ற சொல்லுக்கு நஞ்சீயர் நிர்வாகத்தில், ‘திருவினிடத்தில்
  மாலார்’ என்பது பொருள், பிள்ளான் நிர்வாகத்தில், ‘திருவின் மாலுக்கு
  விஷயமாக இருப்பவர்’ என்பது பொருள்.

2. தமிக்க - தண்டிக்க. நேர்தரவு - ‘குற்றம்பொறுத்தோம்’ என்று நேரில் கூறும்
  ஆணை.

3. ஆஸ்ரயத்துக்குத் தக்கபடியன்றோ எல்லாம்? என்றது, ‘விபுத்துவ அணுத்துவ
   ரூப ஆஸ்ரயத்துக்குத் தக்கவாறு’ என்பது பொருள்.

4. தண்ணீர் துரும்பு - தடை.

5. ஸ்ரீராமா. சந். 40 : 41.

6. ஸ்ரீராமா. கிஷ்கிந். 33 : 40.


      ‘மநுஜேந்த்ரபுத்ர - அறுபதினாயிரம் ஆண்டு செய்தார் செய்த
  குற்றங்களைப் பொறுத்துச் சேரவிட்டு ஆண்டுகொண்டு போந்தார் உங்கள்
  தமப்பனார்; அவர் வயிற்றிலே பிறந்து, குற்றம் செய்தோம் என்று தலையறுக்க