முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
213

பார்த்து, ‘நீ அலையே’ என்கிறாள். இதனால், ‘பகவல்லாபம் சேர்ப்பாராலே’ என்று இருக்கிறாள் என்பது போதரும். சிறு பூவாய்-உன் பருவம் நிரம்பாமை அன்றோ நம் காரியத்தைக் கெடுத்தது? நெடு மாலார்க்கு - அவர்க்குக் காதலை உண்டாக்கிக் கொடு வரவேண்டும் என்று இருந்தாய் அல்லையே? என் தூதாய்-எனக்கு அவர் பக்கல் காதல் இல்லாமை இருந்தாயும் அன்றே! நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய் - ‘எனது நிலையை அங்கே சென்று சொல்,’ என்ன, சொல்லாதே இருந்தொழிந்தாய்; ‘ஸ்ரீ பரதாழ்வான் நோய், என்றால் 1சாதுர்த்திகமாய் இராதது போன்று, இவளும் உலகத்தார் நோயினின்றும் தனது நோயை வேறுபடுத்திக் காட்டுவாள், ‘எனது நோய்’ என்கிறாள். ‘வந்தொழிந்தான், போயொழிந்தான்’ என்பன போன்று, ‘இருந்தொழிந்தாய்’ என்பதும் ஒரு சொல். தானும் நாயகனும் சேர இருத்தலை ஒரு வார்த்தையினாலே நோக்கலாய் இருக்கவும், அது செய்யாது ஆறியிருந்தது ஆதலின், ‘இருந்தொழிந்தாய்’ என்கிறாள்.

 

1. சாதுர்த்திகம் - இது ஒரு முறை ஜூரம்; நான்கு நாள்களுக்கு ஒரு முறை
  வருவது; உடலிலுள்ள நீர் இரத்தம் சதை எலும்பு இவற்றைப் பற்றி வருவது.
  ‘சாதுர்த்திகமாயிராதது போன்று’ என்றது, ஸ்ரீராமபிரானைப் பிரிந்ததால்
  உளதாய விரஹதாபமாகிய நோய் விட்டு நீங்குதல் இன்றி, என்றும்
  நிலைபெற்று நின்று ஸ்ரீ பரதாழ்வானை வருத்தியதாதலின், உலகமக்கட்கு
  விட்டுவிட்டு வருகின்ற முறை ஜூரம் முதலிய நோய்களைப் போன்றது
  அன்று ஸ்ரீ பரதாழ்வானுடைய நோய் என்றபடி.

  ‘வெயர்த்த மேனியன் விழிபொழி மழையன்மூ வினையைச்
  செயிர்த்த சிந்தையன் தெருமரல் உழந்துழந்து அழிவான்
  அயிர்த்து நோக்கினும் தென்றிசை அன்றிவேறு அறியான்
  பயத்த துன்பமே உருவுகொண்டு என்னலாம் படியான்.’

  என்ற கம்பராமாயணச் செய்யுளை ஈண்டு நினைவு கூர்க.

 
    ‘ஜடிலம்-நல்ல மாலை வத்தால் ‘பிள்ளை பரதன் மயிருக்காயிருந்தது’
  என்றாயிற்றுச் சக்கரவர்த்தி கூறுவது; அவனாயிற்றுச் சடைபுனைந்திருக்கிறான்.
  சீரவஸநம்-நல்ல வஸ்திரம் கண்டால் ‘இது பிள்ளைக்கு ஆம்’ என்று கூறுவர்;
  அவனன்றோ மரவுரி உடுத்திருக்கிறான்’ ப்ராஞ்ஜலிம்-அவர்கள்
  இரந்துகொடுக்கப் பெறுமவன், தன் விருப்பத்துக்குத் தான்
  இரப்பாளனாயிருந்தான். பதிதம் புவி - ‘படுக்கையுறுத்தும்’ என்று மடியிலே
  கண்வளருமவனாயிற்றுத் தரைக்கிடை கிடக்கிறான். ததர்சராமோ துர்த்தர்சம்-
  வத்த கண் வாங்காதே கண்டுகொண்டிருக்கும் பெருமாளுக்கும் கண்வைக்க
  ஒண்ணாதபடி இருக்கிறவனை. யுகாந்தேபாஸ்கரம் யதா--பெருமாள்
  ஒருவர்க்கும் கண்வைக்க ஒண்ணாமையேயன்றி ‘உலகமே
  அழியப்புகுகின்றதோ!’ என்னும்படியிருந்தான்’ (ஸ்ரீராமா. அயோத். 100 : 1.)
  என்பது பரதனுடைய துன்பத்தைக் கூறும் சுலோகத்திற்கு வியாக்கியாதா
  அருளிச்செய்த பொருள்.