முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
239

என

என்னிலும், தன்னுடைய 1சௌசீல்ய குணத்தால் என்னை விடான்,’ என்று சமாதானத்தை அடைந்தவர் ஆகிறார்.

    தான் ஓர் உருவே தனி வித்தாய்-2‘சோமபானம் செய்தற்குரிய சுவதே கேதுவே, காணப்படுகிற இவ்வுலகமானது படைப்பதற்கு முன்னே ‘சத்து’ என்று சொல்லக்கூடியதாய், நாம ரூபங்கள் இன்மையின் ஒன்றாய், அடையத்தக்க இரண்டாவது பொருள் வேறு இல்லாததாய் இருந்தது,’ என்கிறபடியே 3இங்கும், இரண்டு இன்மையைக் காட்டுகிற ‘தான் ஓர் தனி’ என்னும் பதங்கள் மூன்று உண்டாய் இருந்தன; ‘இச்சொற்களுக்குப் பயன் யாது?’ எனின், படைத்தலை அருளிச் செய்வதனால் காரண விஷயமாகக் கிடக்கின்றன. மூன்று காரணங்களும் தானே என்கை. ‘தான்’ என்கிற இதனால், முதற்காரணம் வேறு இல்லை என்கை. ‘ஓர்’ என்கிற இதனால் துணைக்காரணம் வேறு இல்லை என்கை. ‘தனி’ என்கிற இதனால், நிமித்த காரணம் வேறு இல்லை என்கை. உரு - அழகு, ஆக, ‘அழகிய 4மூன்று காரணமும் தானேயாகி’ என்றபடி.

    தன்னின் மூவர் முதலாய - விஷ்ணுவாகிற தன்னோடு கூடின மூவர் தொடக்கமான. ‘ஆயின், இறைவனாகிய தான், பிரமன்

 

1. சௌசீல்யம் - சீலத்தின் தன்மை; சீலமாவது-மாந்தர்களோடே புரை
  அறக் கலத்தல்; அதனைத் தன் பேறாக நினைத்திருக்கை-சௌசீல்யம்.

2. சாந்தோக்கிய உபநிட, 6, 2 : 1.

3. ‘இங்கும்’ என்பதற்கு ‘உபநிடதத்தைப்போன்று இத்திருப்பாசுரத்திலும்’
  என்பது பொருள். உபநி்டத வாக்கியம், ‘சதேவ,’ ‘ஏகமேவ,’ ‘அத்விதீயம்’
  என்பன. இவை முறையே, துணைக்காரணம், முதற்காரணம், நிமித்த
  காரணம் வேறு இன்மையைக் காட்டுகின்றன. ‘படைத்தலை
  அருளிச்செய்வதனால்’ என்றது, பாசுரத்தில் ‘மற்றும் மற்றும் முற்றுமாய்’
  என்றதனை நோக்கி. ‘உற்று ஒரு தனியே தானே தன்கணே உலகம்
  எல்லாம், பெற்றவன்’ (கம்ப. வருண. 63.) என்ற செய்யுள் இங்கு நினைவிற்கு
  வந்து பேருவகை தருகின்றது. இதனால், ‘முன்னோர் மொழிபொருளே அன்றி
  அவர் மொழியும், பொன்னே போல் போற்றி’ மொழியும் கம்பருடைய
  மேன்மை புலனாம்.

4. சூக்கும சித்து அசித்தோடு கூடியிருக்கின்ற தன்மையால் முதற் காரணமும்,
  சங்கற்பத்தோடு கூடியிருக்கின்ற தன்மையால் நிமித்த காரணமும், ஞானமும்
  சத்தி முதலிய குணங்களோடு கூடியிருக்கின்ற தன்மையால்
  துணைக்காரணமும், ஆக மூன்று காரணங்களும் இறைவனேயாவான்
  என்பதாம்.