முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
242

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1விரும்பி அநுகூலரான பின்னர், 2‘இவ்விடத்தில் பர்ணசாலையைக் கட்டு என்று எனக்குக் கட்டளையிடல் வேண்டும்,’ என்று இளைய பெருமாள் பிரார்த்தித்தது போன்று, ஏவி அடிமை கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார். அன்றி, இவர் அநுகூலரானபின்பும் அவன் முகங்காட்டாமல் சிறிது நேரந் தாழ்க்க, அது பற்றாமல், அருளாய்’ என்கிறார் எனலுமாம்.

    மான்ஏய் நோக்கி-மானோடு ஒத்த கண்களையுடையளாய். இனி, 3காரியப்பாடு அறக் கண்ணாலே அவனை ஒருக்கால் நோக்கினால், ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலே குளிரச் செய்கின்ற கண்கள் என்று கூறலுமாம். மடவாளை-ஆத்தும குணங்களையுடைய பெரிய பிராட்டியாரை. இனி, மடப்பமாவது துவட்சியாய், அவன் தான் கண்ணாலே இவளை நோக்கினால், 4‘தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ’ என்கிறபடியே, எடுக்கப்பட்ட சாரத்தையுடைய பூப்போன்று இருக்கின்ற மென்மையினையுடையவள் என்று கூறலுமாம். மார்பிற் கொண்டாய் மாதவா-6‘விஷ்ணுவினுடைய திருமார்பில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பிராட்டியார்’ என்கிறபடியே, அவள், திருமார்பில் நித்தியவாசம் செய்கையாலே ‘மாதவன்’ என்னுந் திருநாமத்தையுடையவனே. மாம்பழத்தோடு ஒரு வித சம்பந்தம் இல்லாதிருக்கவும் ஒரு வகை வண்டு ‘மாம்பழ உண்ணி’ என்ற பெயரை அடைவது

 

1. ‘மேல் இரண்டு பாசுரங்களில் சமாதானத்தை அடைந்தவர் இப்பாசுரத்தில்
  ‘சேருமாறு அருளாய்’ என்பதற்குக் காரணம் யாது?’ எனின், அதற்கு இரண்டு
  வகையாக விடையருளிச்செய்கிறார் ‘விரும்பி அநு கூலரான பின்னர்’ என்று
  தொடங்கி. முதல் விடையில், ‘அருளாய்’ என்றது கைங்கரியப் பிரார்த்தனை.
  இரண்டாவது விடையில், புருஷார்த்த மாகைக்காக இறைவன் சிறிது போழ்து
  தாழ்க்க, பிரார்த்திக்கின்றார் என்றபடி.

2. ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.

3. ‘நோக்கி’ என்பதற்கு இருபொருள்: ஒன்று, கண்களையுடையவள்.
  மற்றொன்று, கண். காரியப்பாடற-வேறு பயனின்றி, அதாவது, அன்புடன்
  என்பதாம்.

4. திருவாய். 9. 9 : 4.


5. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 104.