முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
246

    ஈடு : ஆறாம் பாட்டு. இவர் எதிர்முகம் செய்தவாறே, இறைவன் சிறிது தாழ்த்தான்; இவர் ‘என்னை’ 1இழந்தாயே ஆனாய்?’ என்கிறார்.

    2
‘உன்னைப் பார்த்தல், என்னைப் பார்த்தல் செய்ய வேண்டாவோ?’ என்கிறார். வினையேன் வினைதீர் மருந்து ஆனாய் மற்றை மக்கள் எல்லார்க்கும் உள்ள வினைகள் போல அல்லவாயிற்று இவருடைய வினை; அவர்கள் அனைவரும் ‘பகவானைச் சேர வேண்டும்’ என்று அன்றே இருப்பது? அகல நினைக்கிற இது உள்ளது இவர் ஒருவர்க்குமேயாதலின் ‘வினையேன்’ என்கிறார். ‘நான் கிட்டுகை அத்தலைக்குத் தாழ்வு என்று அகலுகைக்கு அடியான வினையைப் போக்கினான்?’ என்னில், விண்ணோர் தலைவா-நித்தியானுபவம் பண்ணும்போது ‘நான் அயோக்கியன்’ என்று அகல வேண்டாதார்க்கு ஏவுகின்றவனாய் இருக்கும் இருப்பில்நின்று வந்து போக்கினான். கேசவா-3‘க என்னும் இது பிரமனுக்குப் பெயராம்; எல்லாரையும் ஏவுகின்றவன் நான் ஆதலின், எனக்கு ஈசன் என்று பெயராம்; நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்; ஆதலால், ‘கேசவன்’ என்ற பெயரை அடைந்தீர்’ என்கிறபடியே, 4அதற்கு இவ்வருகே ஒரு பயணம் எடுத்துவிட்டபடி. மனை சேர் ஆயர் குல முதலே-ஐந்து லஷம் குடி ஆகையாலே மனையோடு மனை சேர்ந்த ஆயர் பாடிக்குத் தலைவனே; இனி, இதற்கு, 5‘ஆயர்கள் மனைகளிலே வந்து சேர்ந்து, அவர்கள் குலத்துக்கு முதலானவனே’ என்று உரைத்தலுமாம். இனி, ‘மனைசேர் ஆயர்’ என்பதற்கு, நான்கு மூங்கில்களைக் கொண்டு போய், தங்கும் இடத்தில் வளைத்துத் தங்குகிற ஆயர்,’ என்று பொருள் கூறலும் ஒன்று. ‘மனை சேர் ஆயர் குல முதலே’ என்றதனால்,

 

1. ‘இழந்தாயேயானாய் என்கிறார்’ என்றது, ‘நைவன்’ என்றதனை நோக்கி.

2. ‘உன்னைப் பார்த்தல் செய்ய வேண்டாவோ?’ என்றது, ‘மருந்தானாய்’
  என்பது முதல் ‘இனைய பெயரினாய்’ என்பது முடிய, பாவம். ‘என்னைப்
  பார்த்தல் செய்ய வேண்டாவோ?’ என்றது, ‘அடியேன்’ என்றதனை நோக்கி;
  வேறு புகலிடம் இல்லாதவன் என்றபடி.

3. ‘கேசவா’ என்று பிரம ருத்திரர்களுக்கு உத்பாதகனான பிரத்யும்நனைச்
  சொல்லுகிறார்.

4. ‘ஒரு பயணம் எடுத்து விட்டபடி’ என்றது, படைத்தலில் நோக்கமுள்ளவனாய்த்
  திருபாற்கடலில் தங்கியிருக்கும் நிலையை.

5. இங்குக் கூறும் பொருளுக்கு ‘ஆயர் மனைசேர் குலமுதலே’ என்று
  சொற்களைக் கூட்டுக.