முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
251

New Page 1

வைத்தோம்; பின்பு அதனை வெளிநாடு காண உமிழ்ந்தோம்; அதில் ஏதேனும் சிறிது வயிற்றில் தங்கி இருக்கக்கூடும் என்று கருதித் திருவாய்ப்பாடியில் வெண்ணெயை விழுங்கினோம் காணும்,’ என்ன, ‘அதற்கு இதனைப் பரிகாரமாகச் செய்தாயோ! அது ஒரு காலவிசேடத்திலே; இது ஒரு கால விசேடத்திலே’ என்ன, ‘அடியார்கள் தொட்ட பொருள் உனக்குத் தாரகமாகையாலே செய்தாய் அத்தனை,’ என்ன, ‘ஆயின், அவ்வெண்ணையினைப் போன்று உம்முடைய சேர்க்கையும் நமக்குத் தாரகங்காணும்; ஆன பின்னர், நீர் உம்மைக்கொண்டு அகலுவீராகில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினால் புக்க உலகம் புகுவீர்,’ என்றான். அவன் கருத்தைத் தாம் அறிந்தமை தோற்ற 1அநுபாஷிக்கிறார் இப்பாசுரத்தில்.

    முன்னமே உலகு ஏழ் உண்டாய்-முன்பு ஒரு காலத்திலே உலகங்கள் ஏழனையும் எடுத்து வயிற்றிலே வைத்தாய். உமிழ்ந்து-பின்னர் அது தன்னை வெளி நாடு காண உமிழ்ந்து. மாயையால் புக்கு வெண்ணெய் உண்டாய் - இச்சையால் புக்கு வெண்ணெய் உண்டாய். ஈண்டு ‘மாயை’ என்றது, 2‘மாயா வயுநம் ஞானம்’ என்கிறபடியே, இச்சா பரியாயமான ஞானத்தை. அது செய்யுமிடத்தில் சக்கரவர்த்தி திருமகனாய்ப் புக்கு ‘வெண்ணெய் அமுது செய்ய’ என்றால் கொடார்கள் அன்றே? ஆதலால், சிறு மனிசர், உவலை யாக்கை நிலை எய்தி - சிறிய மனிதர்களுடைய தாழ்ந்த சரீரத்தினுடைய நிலையைப் பிரகிருதி சம்பந்தமில்லாத திவ்விய திருமேனிக்கு உண்டாக்கிக்கொண்டு வந்து இப்படிச் செய்தாய். 3‘கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழிகோல்கை, சறையினார்’ என்னும் நிலையுள்ள ஆயர்கள் அளவிலே தன்னை அமைத்து வந்து கிட்டி வெண்ணெய் அமுதுசெய்தான் என்றபடி. 4‘தேவகியே நீ முற்பிறவியிற்செய்த நல்வினையானது இப்பொழுது பலத்தைத் தந்திருக்கின்றது; நான் எக்காரணத்தால் உன்னுடைய உதரத்தின் வழியால் உண்டானேனோ’ என்பதனால் கர்ப்பவாசம் சொல்லியிருந்தும், 5‘இந்தக் கிருஷ்ணன் கர்ப்பவாசம் செய்யும் தன்மையை அடையவில்லை; யோநியிலும் வசிக்க இல்லை,’ என்று

 

1. அநுபாஷித்தல்-தொடர்ந்து பின் மொழிதல்.

2. ‘மாயா வயுநம் ஞாநம்’ என்பது நிகண்டு; மாயை, வயுநம், ஞானம் என்பன
   ஒரு பொருட்சொற்கள் என்பது இதற்குப் பொருள்.

3. திருவாய். 4. 8 : 4.

4. ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 8 : 14.

5. பாரதம்.