முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
254

இது, ‘நானும் என்னோடு சம்பந்தமுடையாரும் முடியக்கடவோ மல்லோம்,’ எனப் படர்க்கையை உளப்படுத்திய உளப்பாட்டுப் பன்மை. இனி, இறைவனை உளப்படுத்தியதாகக் கொண்டு, ‘இரண்டு தலையையும் அழித்துக்கொள்ளக்கடவோம் அல்லோம்’ என்று பொருள் கூறலுமாம். தீய அலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய-1‘பூதனையை முடித்து உலகத்துக்கு ஒரு தலைவனைத் தந்த உலக குருவான கிருஷ்ணனுக்கு விஷத்தோடு கூடிய அம் முலைப்பால் சுவையுடையதாயிற்று,’ என்கிறபடியே, உலகத்துக்கு வேர்ப்பற்றானவனை ‘முடிக்கப் பார்த்த நெஞ்சில் தீமையையுடையளாய், யசோதைப்பிராட்டியைப் போன்று அன்பு தோற்றப் பலவாறு பேசிக்கொண்டு வருகின்றவளாய், தனக்குத்தானே முற்றறிவனானவனும் ‘தாய்’ என்று பிரமிக்கும்படி தோற்றின பெரிய வஞ்சனையுடையவளான பூதனை முடியும்படியாக. தூய குழவியாய்-2ஐஸ்வரியமான மேன்மையும் நடையாடாநிற்கவும், அது தோற்றாதபடி கலப்பு அற்ற பிள்ளைத்தனத்தையுடையனாய். ‘இவனுக்குப் பிள்ளைத்தனத்தில் குறை இல்லையாகில், அதன் காரியம் காணாது ஒழிவான் என்?’ என்னில், விடப்பால் அமுதா அமுது செய்திட்ட-விஷம் அமிருதாம் முகூர்த்தத்திலேயாயிற்றுப் பிறந்தது. ‘ஆயின், அவள் இறக்கும்படி எங்ஙனம்?’ எனின், 3தர்மியை வேறு ஒன்று ஆக்க ஒண்ணாமையாலே விரோதித்த அசுரக் கூட்டங்கள் இறந்தார்கள் இத்தனை மாயன் - விஷம் அமிருதாம்படி புசித்துத் தன்னைத் தந்து நன்மை உண்டாக்கின ஆச்சரியத்தையுடையவன்.

    ‘பூதனையுடைய விஷம் அமிருதமாம்படி அமுது செய்தவன் தான் யார்?’ என்னில், வானோர் தனித்தலைவன் - அயர்வு அறும் அமரர்களுக்குத் தனித்தலைவன் ஆனவன். மலராள் மைந்தன் - 4‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார்,’ என்கிறபடியே, அவர்கள் விரும்பித் தொண்டுகளைச் செய்யப் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்குமவன். மைந்தன் - அவளுக்கு மிடுக்கானவன். இனி, இதற்கு, ‘அவளுடைய சேர்த்தியினாலே நித்தியமான புதிய யௌவனத்தையுடையவன்’ என்று பொருள்

 

1. ஹரி வம்ஸம். 53.

2. ஐஸ்வரியமான-இறைமைத்தன்மைக்குரிய.

3. தர்மி-தர்மத்தையுடையது; வஸ்து சொரூபத்தாலே இறந்தான் என்றபடி.
  ‘அமரர்கள் அமுதே அசுரர்கள் நஞ்சே’ என்பது தமிழ்மறை.

4. திருவாய். 8, 1 : 1.