முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
322

New Page 1

‘காக்கும் தனி முதல்’ எனக் கூட்டுக. ‘மணாளன்’ என்பது ‘மணவாளன்’ என்பதன் விகாரம்.

    ஈடு : முதற்பாட்டு. 1‘படைத்தல் முதலான முத்தொழில்கட்கும் காரணனாய் எல்லா உயிர்கட்கும் உள் உயிராய் இருக்கின்ற ஸ்ரீ கிருஷ்ணனானவன் என்னுடைய எல்லையை விட்டுப் போக மாட்டாதபடி ஆனான்,’ என்கிறார். ‘ஆயின், இறைவனுடைய மேன்மை உருவம் குணம் இவற்றை அனுபவிக்கின்ற இவர், ‘இவையும் அவையும்’ என்பது முதலாக அவனுடைய செல்வங்களைப் பேசி அனுபவிப்பதற்குக் காரணம் என்னை?’ எனின், இவர்க்கு அவனுடைய குணங்களை அனுபவிப்பதோடு விபூதியை அனுபவிப்பதோடு ஒரு வேற்றுமை இல்லை. 2முதல் திருவாய்மொழியிலே பரக்க அனுபவித்த இவை வெளிப்படையாய் இருக்கையாலே இங்குத் திரள அனுபவிக்கிறார்.

    இவையும். . .யவரும்-இதனால் சித்தின் கூட்டத்தையும் அசித்தின் கூட்டத்தையும் தொகுத்துச் சொல்லுகிறார், தன்னுளே ஆகியும்-‘இவையும் அவையும்’ என்று இங்ஙனம் பிரித்துப் பேச ஒண்ணாதபடி. 3‘அவன் ஒருவனே’ என்கிறபடியே, தான் என்கிற சொல்லுக்குள்ளே ஆகும்படி தன் மேலே ஏறிட்டுக்கொண்டு தரித்து இருந்தபடியைச் சொல்லுகிறார். ஆக்கியும்-4‘பல பொருள்களாக விரிகிறேன்’ என்கிறபடியே, தன் பக்கலிலேநின்றும் பிரித்து, பெயர் உருவம் அடையத் தக்கவாறு அவற்றைச் செய்தும், காக்கும்-உண்டாக்கிய பொருள்களை ஈரக்கையால் தடவிக் காக்கின்றபடி. அவையுள் தனி முதல்-இதனால், உண்டாக்கிய பொருள்கள் தொழில் செய்தல் தொழில் செய்யாமைகட்குத் தகுதியாம்படி அவற்றுள் அந்தராத்துமாவாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறார். ‘ஆயின், அந்தராத்துமாவாய் நிற்கும் இந்நிலை ‘ஆக்கியும்’ என்று படைத்தலைக் கூறிய போதே அடங்காதோ?’ எனின், 5‘படைத்து அவற்றுள் அநுப்பிரவேசித்தார்’ என்கிறபடியே, அவை பொருளாதலுக்காகவும் பெயர் அடைதலுக்காகவும் பண்ணும் அநுப்பிர

 

1. ‘அவையுள் தனிமுதல், கண்ணபிரான்’ என்பவற்றை நோக்கி அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. முதல் திருவாய்மொழியில் பரக்க அனுபவித்தது, ‘நாமவன்’ என்ற
  பாசுரத்திற்காண்க.

3. சாந். உப. 6. 2 : 1.

4. தைத்திரீய. ஆனந். 6.