முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
283

வந

வந்து ஒல்லைக் கூடுமினோ’ என்று பட்டர் பிரானும் அருளிச் செய்தார். ‘அவ்வரம்பு இட்டுக்கொள்ளுகைக்குக் காரணம் என்னை?’ எனின், அவர் அவர் முற்பிறவிகளிற்செய்து வைத்த நல்வினைகளின் ஏற்றத் தாழ்வுகளே காரணமாம். 1‘அருச்சுனா, நீங்கின செல்வத்தை மீண்டும் அடைய விரும்புகின்றவன், புதிய செல்வத்தை விரும்புகின்றவன், கேவலன், இறைவனையே அடைய வேண்டும் என்று விரும்புகின்றவன் என்னும் இந்நால்வகைப்பட்ட நல்வினைகளையுடைய மக்கள் என்னை வணங்குகிறார்கள்’ என்பது இறைவன் திருவாக்கு. ஆக, அவரவர்களுடைய நல்வினைகளுக்குத் தகுதியாகப் புருஷார்த்தங்களில் ருசி உண்டாகும்; ருசிக்குத் தகுதியாக வழிபாடு உண்டாகும்; வழிபாட்டிற்குத் தகுதியாகப் பலம் இருக்கும் என்று அறிதல் தகும்.

    பிறவித் துயர் அற - ‘இவனைப் பற்றி இப்பேற்றினைப் பெற்றுப் போவதே!’ என்று இரங்குகிறார். ‘பிறவி என்னும் இதனால், பிறப்பு முதலாக உண்டாகும் மற்றை 2ஐந்து விகாரங்களையும் நினைக்கிறார். ஆக - பிறப்பு முதுமை மரணம் முதலான எல்லாத் துன்பங்களும் போகும்படியாக. ‘ஆயின், 3‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்று இவர் தாமும் அவற்றை நீக்கிக்கொள்ளுதற்கு விரும்பி இருக்கவும், அவர்கள் செயலுக்கு இரங்குதல் பொருந்துமோ?’ எனின், இவர்க்கு இப்பிறவியை நீக்கிக்கோடல் முக்கியம் அன்று; எம்பெருமானை அடைந்து அவனுக்குத் தொண்டு செய்தலே உத்தேசியம்; அச்செயலுக்கு இவ்வுடல் தடையாய் இருத்தலின், இதனை நீக்கிக்கொள்ள விரும்புகிறார்; அவர்கட்குப் பிறவி அறுதலே’ உத்தேசியம் ஆதலின், இரங்குகிறார். ஞானத்துள் நின்று - ஆன்ம ஞானத்தின் அளவிலே நின்று, இவ்வநுசந்தானம் இறைவன் அளவும் செல்லாநிற்கவும், அத்துணையும் செல்லாது, ஆன்ம ஞானத்திலேயே கால் ஊன்ற அடியிட்டு நிற்கின்றார்கள் ஆதலின், ‘நின்று’ என்கிறார். துறவி-துறக்கை. சரீரத்தைத் துறத்தலாகிய காரியத்தைக் கூறியபடி. சுடர் விளக்கம் தலைப்பெய்வார் - இது, ‘ஞானத்துள் நின்று’ என்றதன் பலமாய் இருக்கிறது, ஆத்துமாவானது ஞானத்தைக் குணமாகவும், தான் அறிபவனாகவும் இருத்தலின், ‘சுடர் விளக்கம்’ என்கிறார். ‘ஆயின், மோட்ச

 

1. ஸ்ரீ கீதை, 7 : 16. இச்சுலோகத்தில் ‘நல்வினைகளையுடைய மக்கள்’
  என்றதனால், நல்வினையின் தாரதம்மியம் சித்தம் என்று கொள்க,

2. உண்டாதல். பிறத்தல், வளர்தல், குறைதல், நசித்தல் என்பன.

3. திருவிருத்தம், 1.