முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
291

ஒண

ஒண்ணாது என்று என்னுடைய மனத்திலே புகுந்து நிலையியற் பொருளைப் போன்று இருந்தவனை, செடி சீய்த்துக் குடி ஏற்றின படை வீடுகளை விடாதே இருக்கும் அரசர்களைப் போன்று, ‘புறம் பேயும் சேரத் தக்க இடம் உண்டு’ என்று தோற்ற இராமல் இருக்கின்றான் ஆதலின், ‘மனத்தே’ எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து ஓதுகின்றார். ‘இப்படி இருந்து செய்கிறது என்?’ என்னில், உயர் வினையே தரும் - 1ஞான விஸ்ரம்ப பத்திகளைத் தாராநின்றான். இனி, இதற்கு, 2‘இயமன் முதலானோர் தலைகளிலே அடியிடும்படியான சிறப்பைத் தாராநின்றான்’ எனலுமாம். தந்து சமைந்தானாய் இராது மேன்மேலும் தந்துகொண்டேயிருக்கின்றான் ஆதலின், ‘தந்து’ என்னாது ‘தரும்’ என்கிறார். ‘ஆயின், பத்தியை மேன்மேலும் தருவானோ?’ என்னில், 3‘காதல் கடல்புரைய’, 4‘காதல் கடலின் மிகப்பெரிதால்’, 5‘நீள்விசும்பும் கழியப் பெரிதால்’, 6‘சூழ்ந்தனிற் பெரிய என் அவா’ என்பன இவருடைய திருவாக்குகள். ஒண் சுடர்க்கற்றையை - இதனால், எனக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றியே, ‘தான் உபகாரங்கொண்டான்’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற ‘இராநின்றான்’ என்கிறார். இனி, இதனால், தம்மை வசீகரித்த அழகை அருளிச்செய்கின்றார் என்று கூறலுமாம். 7‘வலிமை பெற்ற ஒளியின் தொகுதி போன்றவன்’ என்பது ஸ்ரீ விஷ்ணு புராணம்.

    ‘இப்படித் தன் பேறாக உபகரித்தவன், தன் உபகாரங்கொள்வார் இல்லாதான் ஒருவனோ?’ என்னில், அயர்வு இல் அமரர்கள் ஆதிக்கொழுந்தை-இறைவனை நுகரும் நுகர்ச்சிக்கு மறதி என்பதனை எப்பொழுதும் இல்லாதவர்களாய், அந்நுகர்ச்சிக்குப்

 

1. ‘ஞானமாவது, பிரவணத்திற்சொல்லுகிற சேஷத்துவ ஞானம். விஸ்ரம்பமாவது,
  நமஸ்ஸிலே சொல்லுகிற உபாய அத்யவசாயம். பத்தியாவது, நாராயணபதத்திற்
  சொல்லுகிற பிராப்பியத்தில் விரைவு,’ என்பர் அரும்பதவுரைகாரர்.

2. ‘காவலில் புலனை வைத்துக் கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
   நாவலிட்டு உழிதர் கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே’

  என்னும் திருவாக்கு ஒப்பு நோக்குக. (திருமாலை. 1.)

3. திருவாய். 5. 3 : 4. 

4. திருவாய். 7. 3 : 6.

5. திருவாய். 7. 3 : 8.

6. திருவாய். 10. 10 : 10.

7. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 68.