முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
348

னார். ‘என் கண்’ என்பதில், கண் என்பது பெயர்ச்சொல். ஏழாம் வேற்றுமை யுருபாகக் கொள்ளினும் அமையும்.

    இத்திருவாய்மொழி, துள்ளல் ஓசையில் வழுவி, நாற்சீர் நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்பெறும்.

    ஈடு : முதற்பாட்டு. இத்திருவாய்மொழியில் அருளிச்செய்கிற பொருள்களை எல்லாம் தொகுத்து அருளிச்செய்கிறார். இப்பாசுரத்தில், மகாபலி, தன் வரவை நினையாதே இருக்க, அவன் பக்கலிலே இரப்பாளனாய்ச் சென்று தன்னுடைமையைத் தனது ஆக்கியது போன்று, நான் நினைவு இன்றிக்கே இருக்கத் தானே வந்து தன் வடிவழகை என் கண்ணுக்கு இலக்கு ஆக்கினான் என்று அவன் தன்மையை நினைந்து இனியர் ஆகிறார்.

    பொரு - இத்தால், திரு உலகு அளந்தருளுகிற போது, திவ்விய ஆயுதங்கள் நமுசி முதலாயினார்கள் மேலே பொருதபடியைச் சொல்லுகிறார். இனி, திவ்விய ஆயுதங்கள் தாம் ஒருவரை ஒருவர் ஐயங்கொண்டு பொருகிறபடியைச் சொல்லுகிறார் என்று கோடலுமாம். ஆயின், நமுசி முதலாயினார்களோடே பொரும் என்ற பொருள் பொருந்துவதாம்; 1‘இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரிகான்று, அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-விடங்காலும், தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான், பூவார் அடிநிமிர்த்த போது’ என்றார் பூதத்தாழ்வாரும். திவ்விய ஆயுதங்கள் தம்மில் தாம் பொருதல்

 

1. இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இடத்திருக்கையில் ஸ்ரீபாஞ்சஜன்யமானது
  அப்போது அப்போது பிறந்த வெற்றியை நினைத்து ஆரவாரித்தது; எரி
  கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி - அங்ஙனம் ஆர்ப்பதற்கு
  அவசரமின்றிக்கே, திருவாழி, நெருப்பை உமிழ்ந்து பகைவர்களை ‘வாய், வாய்’
  என்று ஒடுங்கப்பண்ணியது; விடங்காலுந் தீவாய் அரவணை-
  திருவனந்தாழ்வான் பகைவர்கள் மேலே கிடந்த இடத்தே கிடந்து
  நெருப்பை உமிழ்ந்தான்; அவன், ஆங்கு ஆரவாரமது கேட்டு அழலுமிழும்
  பூங்கார் அரவணை’யாவன் அன்றே? அப்பரமபதத்திலும் இப்படிச்
  செய்யுமவன், பகைவர்கள் நிறைந்திருக்கும் இத்தேசத்தில் இப்படிச்
  செய்யச்சொல்ல வேண்டுமோ? ஆங்கு ஆரவாரமாவது, “அஹமந்நம்
  அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாத: அஹமந்நாத: அஹமந்நாத:” என்னும்
  ஆரவாரம். அஹமந்நம்-நான் பகவானுக்கு இனியன்; அஹமந்நாத: - நான் 
  பகவானாகிற இன்பத்தை அனுபவிக்கிறவன். (தைத்திரீய உபநிடதம், பிரு. 10.)
  ‘அங்கே அது கேட்டு அப்படிப் படுகின்றவர்கள் இத்தேசத்தில் இது
  கண்டால் சொல்ல வேண்டுமோ?’ என்றபடி. ‘இவர்கள் இப்படி
  அலமருகைக்கு அடி என்?’ என்னில், அரவணைமேல் தோன்றல்
  திசையளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது-திருவனந்தாழ்வானைப்
  படுக்கையாகவுடைய சர்வேஸ்வரன் காடும் ஓடையும் அளக்கைக்காகப்
  புஷ்பஹாஸ சுகுமாரமான திருவடிகளை நிமிர்த்த போது, எல்லாம்
  படவேண்டாவோ அவன் இப்படி வியாபாரியாநின்றால்?’
  (இரண்டாந்திருவந். 71.)