முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
349

என

என்ற போது - 1அஸ்தான பயசங்கையாலே ஒருவரை ஒருவர் ஐயங்கொண்டு பொருகிறார்கள் என்றபடி. 2‘ஸ்ரீராகவனைச் சரணமாக அடைந்தேன்’ என்ற விபீஷணனை அன்றே ‘கொல்லுங்கள்’ என்றார்கள்? 3‘ஸ்ரீபரதனைக் கொல்லுவதில் பாவத்தை நான் பார்க்கின்றேன் இல்லை’ என்றார் இளைய பெருமாள். மா - அவற்றின் வடிவின் பெருமையைச் சொல்லுகிறது. அன்றி, அடியார்கள் திறத்தில் இறைவனைக்காட்டிலும் அவர்களுக்கு உண்டான பக்ஷபாதத்தைச் சொல்லுகிறது என்று கோடலுமாம். ஆக, இதனால், 4‘விஷ்ணுவை வழிபட்டு வணங்குகிற உயிர்களை, ஒன்றாலும் தடுக்கப்படாதவைகளான சக்கரம் முதலிய ஆயுதங்கள் எல்லா ஆபத்துகளினின்றும் காப்பாற்றுகின்றன’ என்கிறபடியே, 5சர்வேஸ்வரன் எதிரியானாலும் அவன் கையிலே காட்டிக்கொடாமல் நோக்கும் பெருமையைச் சொல்லுகிறது.

    நீள் படை ஆழி சங்கத்தோடு - நீள் படையான ஆழி சங்கத்தோடே கூட. ‘ஆயிரங்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக்கொள்ளும்’ என்னுமாறு, படைகள் சர்வேஸ்வரன் அதிகரித்த காரியத்திலே அவன் தன்னிலும் முற்பட்டு இருப்பவை ஆதலின் ‘நீள்படை’ என்கிறார். திரு மா நீள் கழல் ஏழ் உலகும் தொழ - செல்வத்திற்கு அறிகுறியானவையும், சிரமேற்கொள்ளத் தக்கவையும், ஆசை சிறிது உடையார் இருந்த இடம் எல்லையாக வளர்வனவும் ஆன திருவடிகளை ஒரு சாதந அனுஷ்டானம் பண்ணாதாரும் தொழும்படியாக. 6‘நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்று ஆசைப்பட்டுக் கிடக்கும் திருவடியையன்றே ஆசை

 

1. அஸ்தானபயம்-இடமல்லாதவிடத்தில் உண்டாகும் பயம்.

2. ஸ்ரீராமா. யுத். 17 : 27.

3. ஸ்ரீராமா. அயோத். 96 : 24.

      இந்த ஸ்ரீராமாயண சுலோகங்கள் இரண்டும் இடம் அல்லாத இடத்தில்
  உண்டாகும் பயத்திற்குக் காட்டப்படும் மேற்கோள்கள்.

4. விஷ்ணு தர்மம், அத் : 78.

5. திருவாழியாழ்வானும், இஷீகாஸ்திரமும், தூர்வாசரையும் காகத்தையும்
  மெள்ளமெள்ளப் பின் தொடர்ந்தமை இங்கு நினைவு கூர்க. அவ்வாறு
  தொடர்ந்தமையாலன்றோ அவர்கட்குச் சரணாகதிக்கு அவகாசம் கிடைத்தது.

6. திருவாய்மொழி, 9. 2 : 2.