முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
353

102

102

        எம்பி ரானைஎந் தைதந்தை தந்தைக்குந்
        தம்பி ரானைத்தண் தாமரைக் கண்ணனைக்
        கொம்பு அராவுநுண் நேரிடை மார்பனை
        எம்பி ரானைத் தொழாய்மட நெஞ்சமே!


    பொ-ரை :
எனக்கு உபகாரத்தைச் செய்தவனை, என் குடிக்கெல்லாம் உபகாரத்தைச் செய்தவனை, குளிர்ந்த செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனை, பூங்கொம்பையும் பாம்பையும் போன்ற நுட்பமான மெல்லிய இடையையுடைய திருமகளைத் திருமார்பில் உடையவனை, எம்பிரானை, மடமையையுடைய மனமே! வணங்குவாய்.

    வி-கு : ‘கொம்பராவு’ என்பது, உம்மைத்தொகை, ‘நேரிடை’ என்பது, அன்மொழித்தொகை. ‘மடம்’ என்பது, கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘இறைவன் சொரூபம் இருந்தபடி கண்டாயே! நீயும் 2உன் சொரூபத்துக்குச் சேர நிற்கப்பாராய்’ என்கிறார்.

    எம்பிரானை-மேல் பாசுரத்திற்கூறிய அவன் நீர்மையை நினைத்து ‘என் நாயன் ஆனவனை’ என்கிறார், எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை - தம்மளவிலேயாய் 3அடியற்று இருக்கையன்றியே, தம் குடிக்கு நாயகன் ஆனவனை என்கிறார். இவர் இப்படித் துதித்தவாறே, 4பிரயோஜநாந்தரபரருடைய பாசுரத்துக்கும் 5அநந்யப் பிரயோஜனருடைய பாசுரத்துக்கும் வேற்றுமை அறியுமவன் ஆதலின், ‘இப்படித் துதிக்கிறவர் யாவர்?’ என்று குளிர நோக்கினான். ‘தண் தாமரைக் கண்ணனை’ என்கிறார். ‘ஆயின், 6‘என்னை வைக்கின்றவர்களையும், வெறுக்கின்றவர்களையும். கொடிய தன்மை

 

1. இறைவன் சொரூபம்-பரமபத்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க வந்து
  முகங்காட்டுதல்.

2. உன் சொரூபம்-பாரதந்திரியம்; இறைவனுக்கு அடிமை. 

3. அடியற்று - முதல் அற்று.

4. பிரயோஜநாந்தரபரர் - வேறு பலன்களை விரும்புகின்றவர்.

5. அநந்யப்பிரயோஜனர் - இறைவனைத் தவிர வேறு பலன்களை
  விரும்பாதவர்.

6. ஸ்ரீ கீதை, 16 : 19.