ஈ
|
100 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
ஈடு :
மூன்றாம்பாட்டு. ‘இன்று இச்செயல் செய்யக்கடவதாக நினைத்த நீர், அன்று, 1‘உண்ணாது
உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்த’ லாகிய அச்செயலை எதற்காகச் செய்தீர்?’ என்கிறாள்.
இரக்க மனத்தொடு
இவள் - இரங்கின நெஞ்சையுடைய இவள். இரக்கம் - நெஞ்சில் நெகிழ்ச்சி. 2அன்றி,
ஈடுபாடு என்றும், ஈரிப்பு என்றும் பொருள் கூறலுமாம். எரி அணை அரக்கும் மெழுகும் ஒக்கும் - எரியை
அணைந்த அரக்கும் மெழுகும் போலே உருகா நின்றாள். அரக்கும் மெழுகும் என்னும் இவற்றை நெஞ்சுக்கு
ஒன்றும், இவள்தனக்கு ஒன்றுமாகக் கொண்டு பொருள் கூறுவர் பிள்ளை திருநறையூர் அரையர்.
நெஞ்சும் இவள்தனக்குக் 3கையடைப்பு ஆகையாலே இவள்தனக்கே இரண்டையும் அடை ஆக்கி
அருளிச் செய்வர் பட்டர். 4‘சக்தியில் விஷ்ணுவைப் போன்றவர்; பார்க்கத்
தகும் தன்மையில் சந்திரனைப் போன்றவர்’ என்கிறபடியே, பல பொருள்களையும் இவளுடைய படிக்கித்
திருஷ்டாந்தமாகக் கூறக் கூடியவாறு இவள்தன் நிலை இருக்கிறது என்றபடி. 5அரக்கும்
மெழுகும், நெருப்பிற்குள் புகில் கரிந்து போம்; கடக்க இருக்கில் வலிக்கும்; அதனைச் சார்ந்து
நின்றுழி உருகும்; அது போன்று, 4முடிந்து பிழைக்கவும் பெறாமல், தரித்திருக்கவும் பெறாமல்,
நோவு
_____________________________________________________________
1. ‘உண்ணாது உறங்காது
ஒலிகடலை ஊடுஅறுத்துப்
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற
போதெல்லாம்’
(நாய்ச். திரு. 11 : 7.)
‘கடல்வழி விடநிசி சரர்பொடி
படிரு கண்சீறி
வடகயி லையில்எழு விடைதழு
வியதும றந்தாரோ
அடல்அரவு அமளியில் அறிதுயில்
அமரும்அ ரங்கேசர்
இடர்கெட வருகிலர்
முருகலர் துளவும்இ ரங்காரே.”
(திருவரங்கக்கலம்பகம)
என்ற அருமைப்பாசுரம் இவ்வியாக்கியானத்தோடு
படித்து இன்புறத் தகும்.
2.
ஈடுபாடு - துக்கம். ஈரிப்பு - சினேகம்.
3. கையடைப்பு - இவளிடத்தில்
அந்தர்ப்பூதம்.
4.
ஸ்ரீராமா. பால. 1 : 18.
5. ‘இடர்உற மறையோரும்
எரியுறும் மெழுகானார்.”
(கம்பரா. கங். 60)
“மெழுகெரி முகந்த தொக்கும்
தாய்மெலி வகற்றி னானே”
(சிந். செய். 2095)
“எரியணை அரக்கு ‘
என்பதற்கு எழுதும் பதசாரம், கற்போர்க்குக் கழிபேரின்பம்
பயப்பதாம்.
|