1 4 7
102 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
147
இலங்கைசெற் றவனே!
என்னும்; பின்னும்
வலங்கொள்புள் உயர்த்தாய்:
என்னும்; உள்ளம்
மலங்கவெவ்
வுயிர்க்கும்; கண்ணீர்மிகக்
கலங்கிக் கைதொழும்
நின்றுஇவளே.
பொ - ரை :
இவள், ‘இலங்கையினை அழித்தவனே!’ என்கிறாள்; அதற்குமேல், ‘வெற்றியைக் கொண்ட கருடப்பறவையினைக்
கொடியாக உயர்த்தியவனே!’ என்கிறாள்; மனமானது கலங்கும்படி நெருப்பினைப் போன்று பெருமூச்சு எறிகின்றாள்;
கண்களில் நீர் மிகும்படி நின்று அறிவு கலங்கிக் கைதொழுகின்றாள்.
வி-கு :
‘என்னும், என்னும், உயிர்க்கும், தொழும்’ என்பன, ‘செய்யுள்’ என் முற்றுகள். ‘நின்று கைதொழும்’
என மாற்றுக.
ஈடு :
நான்காம் பாட்டு. ‘‘அரக்கன் இலங்கை செற்றீர்’ என்கிற இது எப்பொழுதும் உள்ளது ஒரு செயல்
அன்றுகாண், எப்பொழுதாயினும் ஒரு கால விசேடத்திலே நிகழ்வதுகாண்’ என்றாள் திருத்தாய்; அது
பொறுக்க மாட்டாமே, அதுதன்னையே சொல்லுகிறாள்.
இலங்கை செற்றவனே என்னும்
-எனக்குப் பாண்டே உதவி உபகரித்தவனே!’ என்னாநின்றான். முன்பு தனக்கு உதவினவன் இப்பொழுது
தனக்கு உதவாது ஒழித்தாற்போலே கூப்பிடுகிறாள். 1‘மலை எடுத்தல், கடல் அடைத்தல்,
அம்பு ஏற்றல் செய்ய வேண்டுமோ? என் பக்கல் வரும்போது என்ன தடை உண்டு?’ என்கிறாள்
எனலுமாம். திருத்தாய், இவள் விடுக்கைக்குச் சொன்னது தானே இவளுக்குப் பற்றுகைக்கு உடலாய்விட்டது.
பின்னும் - அதற்குமேல். வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் - ‘மிடுக்கையடைய புள்ளாலே தாங்கப்பட்டவனே!
என்கிறாள். ‘விடாயர் இருந்த இடத்தே 2சாய்கரகம் போலே உயர வைத்துக்கொண்டு
வந்து காட்டும் பரிகரத்தையுடையவனே!’ என்கிறாள் என்றபடி. அன்றி, ‘மிடுக்கையுடைய புள்ளைக்
கொடியாக உடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.
_____________________________________________________________
1. ‘பிராட்டிக்கு உதவினவன்
எனக்கு உதவானோ?’ என்று கொண்டு வேறு வகையாகப்
பொருள் அருளிச்செய்கிறார், ‘மலையெடுத்தல்’
என்று தொடங்கி.
2. சாய்கரகம் - தண்ணீர்ப்
பந்தலிலே உயரவைத்துச் சாய்க்கிறகரகம்.
|