| உள 
  
    | 
நான்காந்திருவாய்மொழி - பா. 5 | 
    103 |  
    உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் 
- கொண்டு வருவதற்குப் பரிகரம் இருந்தும் வரக்காணாமையாலே மனமானது வேர்பறியும்படி நெடுமூச்சு எறியாநிற்கும்.
1‘கழுத்தளவு நீரில் இருக்கிற தளிர்களை யுடைய மரங்களைத் தனது மூச்சுக் 
காற்றினால் கொளுத்துகின்றவள் போல இருக்கிற சீதை’ என்றார் ஸ்ரீவால்மீகி பகவான். 2தண்ணீர் 
மிக - நெடுமூச்சாகப் புறப்பட்டு, புறப்படாதது கண்ணீராய்ப் புறப்படா நின்றது. கலங்கிக் கைதொழும் 
- 3தெளிந்திருந்து தொழுமது இல்லை அன்றே காதலி? இவளே - 4அவன் தொழும்படியான 
வேண்டற்பாடுடைய தான் தொழாநின்றாள்.                         
(4) 
148 
 
        இவள்இராப் பகல்வாய் 
வெரீஇத்தனகுவளைஒண் கண்ணநீர் 
கொண்டாள்; வண்டு
 திவளும்தண் அம்துழாய் 
கொடீர்; எனத்
 தவள வண்ணர் 
தகவுகளே.
 
    
பொ - ரை :
இவள் 
இரவும் பகலும் வாயால் பிதற்றிக்கொண்டு தன்னுடைய கருங்குவளை போன்று கண்களில் நீரினைக் கொண்டாள்; 
வண்டு படிந்து ஒளி விடுகின்ற குளிர்ந்த அழகிய திருமார்வில்  இருக்கின்ற திருத்துழாய் மாலையினைக் 
கொடுக்கின்றீர் இலீர்; ஆதலால், தூய்மையான பரிசுத்தத்தையுடையவரே! உம்முடைய தகவுகள்தாம் என்னே! 
    
வி-கு : 
‘வெரீஇ’ என்பது, சொல்லிசையளபெடை. தன - அகரம் ஆறனுருபு. காண்: சாதியொருமை. கண்ண - அகரம் 
சாரியை. ‘என’ என்பது, ‘என்ன’ என்ற சொல்லின் விகாரம். ‘என்ன போதித்தும் 
_____________________________________________________________ 
1. 
ஸ்ரீராமா. 17 : 29. 
2. ‘கண்ணீர் மல்கி’ 
என்றதன் உரையை நோக்குக.   
(பக். 93.) 
3. ‘மகளிர், தெளிந்திருக்கும் 
காலத்துக் கணவனது அன்பைப் பெறுவதற்கு அவனைவணங்கமாட்டார்’ என்பது கருத்து. ‘ஞானிகள் 
இறைவனுடைய திருவருளைப் பெறுதல்
 நிமித்தம். அவனை வணங்கமாட்டார்கள்’ என்ற விசேடப்பொருளும் 
தோன்றும்.
 ‘அடியேன் நான் முயற்சியின்றி நின்னருளே பார்த்திருப்பன் நீசனேனே’ என்றார்
 திவ்வியகவி. 
‘நீர் இரக்கம் இலீரே’ என்றதன் உரையும் ஈண்டு நோக்குக.
 
(பக். 98). 
4. ‘பொய்ப்ப விடேஎம் 
எனநெருங்கில், தப்பினேன் என்றுஅடி சேர்தலும் உண்டு’ (கலித்.89) என வருதலால், தலைவன் வணங்கும் 
வழக்கு உண்டு என்பதனை அறிதல் தகும்.
 |