| என 
  
    | 
    104 | 
திருவாய்மொழி - 
இரண்டாம் பத்து |  
என்ன?’ என்பது தாயுமானவர் 
பாடல். தவளம் - வெண்மை; அது ஈண்டுத் தூய்மைக்கு ஆயிற்று. வண்ணம் - தன்மை. இதனை 
‘இயற்சொல்’ என்பர் நச்சினார்க்கினியர். 
    ஈடு : ஐந்தாம் பாட்டு.
இவள் இப்படித் 
துக்கப்படுகின்ற இடத்திலும் வரக் காணாமையாலே, 1‘அருள் அற்றவர்’ என்கிறாள். 
    இவள் இராப்பகல் 
வாய் வெரீஇ - 2‘ஆடவர் திலகனான ஸ்ரீராம்பிரான் எப்பொழுதும் உறக்கம் இல்லாதவராக 
இருக்கிறார்; ஒருகால் உறங்கினராயினும், ‘சீதா’ என்கிற மதுரமான வார்த்தையினைச் சொல்லிக் 
கொண்டு விழித்துக் கொள்ளுகிறார்’ என்கிறபடியே, ‘வாய் வெருவுவான் அவனாக இருக்க, இவள் வாய் 
வெருவுகின்றாளே!’ என்கிறாள். ‘இவள் இராப்பகல் வாய் வெரீஇ’ என்றதனால் 3‘பொய்ந்நின்ற 
ஞானம்’ தொடங்கி இத்திருப்பாசுரம் முடிய இவர் பாடிக்கொண்டு வந்தன எல்லாம் வாய் வெருவின இத்தனையே 
என்பதும், அவதானம் பண்ணி அருளிச்செய்கின்றார் அல்லர் என்பதும் போதரும். ‘அவதானம் பண்ணாமல் 
அருளிச்செய்தல் கூடுமோ?’ எனின், வாசனையே உபாத்தியாயராகச் சொல்லிக் கொண்டுவரச் 
சொல்லுகிறார் இத்தனை. 
    தன குவளை ஒண் கண்ண 
நீர் கொண்டாள் - தன்னுடைய வாய குவளைப்பூப் போலே இருக்கிற அழகிய கண்களிலே நீரைக் கொண்டாள். 
‘ஆனந்தக் கண்ணீர் பெருக்கு எடுக்கக்கூடிய கண்களில் துக்கக் கண்ணீர் பெருக்கு எடுத்து ஓடுகின்றதே!’ 
என்பாள், ‘குவளை ஒண்கண்ண நீர் கொண்டாள்’ என்றும், ‘இக்கண்ணுக்கு 
_____________________________________________________________ 
1. ‘என, தவள வண்ணர் 
தகவுகளே’ என்றதனை நோக்கி அவதாரிகை அருளிச் செய்கிறார். 
2. ஸ்ரீராமா. சுந். 38 : 
48 இச்சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்வருமாறு: “சீதேதி மதுராம் வாணீம் 
வியாகரந் ப்ரதிபுத்யதே’ என்று வாய்வெருவுவான்
 அவன் கிடீர். அநித்ரஸ் ஸததம் ராம: - நித்திரையோடே 
காலக்ஷேபம் பண்ணவேண்டும்
 செலவுடையவர், ஸந்ததம் அநித்ரராயிருப்பர். சுப்தோபிச - ஸததம் நித்ர 
: என்று
 வைத்து, ஸூப்தோ பிச என்கிறது, பராகர்த்த அநுசந்தான அபாவத்தைப் பற்ற.
 நரோத்தம: 
- அபிமதவிஸ்லேஷத்தில் இங்ஙனே இருக்கைபோலே -
 புருஷோத்தமத்தமாவது.’
 
3. திருவிருத்தம், 1. 
4. அவதானம் - கவனம், 
ஞாபகம். |