இலக
நான்காந்திருவாய்மொழி - பா. 6 |
105 |
இலக்கானார் கண்ணிலே
காணக்கூடிய கண்ணீரைத் தன் கண்ணிலே கொண்டாள்’ என்பாள், ‘தன் கண் நீர் கொண்டாள்’
என்றும் கூறுகின்றாள். ‘அதற்கு நம்மைச் செய்யச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘வண்டு திவளும்
தண் அம் துழாய் கொடீர்’ என்கிறாள்; அதாவது, ‘விரஹ வெம்மையால் வாடின இவள் மார்வில் மாலையை
வாங்கி, உம்முடைய மார்வில் செவ்வி மாறாத மாலையைக் கொடுக்கின்றிலீர்‘ என்றபடி. ‘அவ்வன்டுகளுக்கு
என்ன கண்ணீரைக் கண்டு கொடுக்கிறீர்?’ என்பாள், ‘வண்டு திவளும் துழாய்’ என்கிறாள்.
திவளுகை - படிதல், அசைதல், ஒளி விடுதல். தவள வண்ணர் தகவுகள் என1 ‘சுத்த சுவபாவரான
உம்முடைய தகவுகள் எங்கே போயின?’ என்று எம்பார் அருளிச் செய்வர். ‘உம்மைப் போலே நாலு
சிஷ்டர்கள் அமையும் அபலைகள் குடிகெட’ என்று பட்டர் அருளிச்செய்வர்.
(5)
149
தகவுஉடை யவனே! என்னும்
;பின்னும்
மிகவிரும்பும்;
பிரான்!என் னும்;எனது
அகஉயிர்க்கு
அமுதே!என் னும்;உள்ளம்
உகஉருகி நின்று உள்உளே.
பொ-ரை :
‘மனமானது நிலை கெடும்படி நீர்ப்பண்டமாக உருகி நின்று, ‘மேலும் மேலும் மேலும் அருள் உடையவனே!’
என்கிறாள்; அதற்கு மேல், மிகுதியாக விரும்புகிறாள்; ‘எனக்கு உதவியினைச் செய்தவனே! என்கிறாள்;
‘என்னிடத்துள்ள ஆத்துமாவிற்கு அமுதே! என்கிறாள்.’
வி -கு :
உள்உளே -மேலும் மேலும். ‘உள்ளே உள்ளே’ என்று உரைத்தலும் ஒன்று. ‘நின்று என்னும்’ என மாற்றுக.
ஈடு :
ஆறாம் பாட்டு. இவள் துன்பத்தினைக் கண்ட திருத்தாய் 1‘அருள் அற்றவர்’ என்றாள்;
இவள் அது பொறாமல்
_____________________________________________________________
1. ‘முன்பு சித்த
சுவபாவருமாய்த் தயாவானுமாய் இருந்த நீர், இப்போது சுத்தசுவபாவரும்
அன்றிக்கே தயாஹீனருமாய்விட்டீர்’
என்பது எம்பாருடைய திருவுள்ளம். என -எங்குற்றன
என்பது பொருள். சுத்த சுவபாவரும் அல்லர், தயாவானும்
அல்லர் என்பது பட்டருடைய
திருவுள்ளம். ‘என தவள வண்ணர், என தகவுகள்’ என்று கொண்டு, ‘என்ன
சுத்த
சுவபாவர்? என்ன தகவுகள்?’ என்று பொருள் கொள்க. இப்பொருளையே ரசோக்தியாக,
‘உம்மைப்போலே
நாலு சிஷ்டர்கள் அமையும்; அபலைகள் குடிகெட’ என்று
அருளிச்செய்கிறார்.
2. ‘என, தவளவண்ணர்
தகவுகளே’ என்றதனை நோக்கி, ‘அருள் அற்றவர் என்றாள்’
என்கிறார்.
|