| New Page 1 
  
    | 
    106 | 
திருவாய்மொழி - 
இரண்டாம் பத்து |  
‘தகவுடையவனே’ என்று 
அதனையே நிரூபகமாகச் சொல்லுகிறாள் என்கிறாள். 
    தகவுடையவனே என்னும் 
- ஐயகோ! 1‘ஆகரத்தில் தகவு மறுக்குமோ? நம் குற்றங்காண்,’ என்கிறாள். இனி, 
‘தகவு இல்லை என்றவள் வாயைப் புதைத்தாற்போலே, 2வந்து தோன்றுவதே!’ என்று, அவன் 
வந்தால் செய்யும் விருப்பத்தைச் செய்கிறாள் எனலுமாம். பின்னும் மிக விரும்பும் - 
உருவெளிப்பாட்டின் தன்மை இருக்கிறபடி. 3பிரான் என்னும் -‘பெற்ற தாய்க்கு இடம் 
வையாமல் வந்து தோன்றுவதே! இது என்ன உபகாரந்தான்’ என்கிறாள். எனது அக உயிர்க்கு அமுதே என்னும் 
- ‘என்னுடைய உள்ளே இருக்கிற ஆத்துமாவுக்கு இனியனானவனே!’ என்கிறாள். இறைவன், நித்தியமான 
ஆத்துமா அழியாமல் நோக்கும் அமுதமாதலின், ‘அக உயிர்க்கு அமுதே’ என்கிறாள். உள்ளம் உக 
உருகி நின்று - வடிவம் இல்லாத மனமானது வடிவினை அடைந்து உருகி நீர்ப்பண்டமாய் மங்கிப்போகாநின்றது.  
உள்ளம் உருகி நின்று தகவுடையவனே என்னும்; பின்னும் மிக விரும்பும்; பிரான் என்னும்; எனது அக 
உயிர்க்கு அமுதே என்னும்; இவை, இவள் பேசும் பேச்சைக் கொண்டு நாம் அறிந்தவைகள்; உள் ஓடுகிறது, 
உள் உளே - 4வாசா மகோசரம். இனி, ‘உள் உளே’ என்பதற்கு, மேலும் மேலும் என்று 
பொருள் கூறுவாருமுளர். அப்பொருளுக்கு, ‘மேலும் மேலும் உருகி நின்று என்னும்’ எனக்கூட்டுக.   
(6) 
150 
 
        உள்உள்ஆவி உலர்ந்து 
உலர்ந்து, எனவள்ளலே! கண்ணனே! 
என்னும்;பின்னும்
 வெள்ளநீர்க் கிடந்தாய்! 
என்னும்; என
 கள்வி தான்பட்ட 
வஞ்சனையே?
 
    
பொ - ரை : 
உள்ளே இருக்கிற உயிரானது சருகாக உலர்ந்து, எனக்கு உதவியைச் செய்தவனே! கண்ணனே!’ என்று கூப்பிடுகின்றாள். 
_____________________________________________________________ 
1. 
ஆகரம் - கனி; உத்பத்தி ஸ்தானம் என்றபடி. 
2. ‘வந்து தோன்றுவதே’ 
என்றது, உரு வெளிப்பாடு. செய்யும் விருப்பத்தைச் செய்தலாவது,பூசும் சாந்தும் புனையும் கண்ணியும் 
முதலானவற்றைச் சேர்க்கை.
 
3. பிரான் - உபகாரகன். 
‘பிரிவுக்காலத்தில் செய்யும் உபகாரம் ஏன்?’ என்ன, ‘பெற்றதாய்க்கு இடம் வையாமல் வந்து தோன்றியது’ 
என்கிறாள்.
 
4. வாசா மகோசரம் - 
வாக்கிற்கு எட்டாதது. உள்-உள்ளே ஓடுகிறது. உளே - உள்ளேதான்என்பது பொருள்.
 |